Home விளையாட்டு WWCT20I WIvsPak: மேற்கு இந்திய தீவை வீழ்த்திய பாகிஸ்தான்.

WWCT20I WIvsPak: மேற்கு இந்திய தீவை வீழ்த்திய பாகிஸ்தான்.

216
0
WWCT20I WIvsPak மகளிர் உலககோப்பை

WWCT20I WIvsPak: மகளிர் உலககோப்பை மேற்கு இந்திய தீவுயை வீழ்த்திய பாகிஸ்தான். womens world cup t20 international. cricket news in tamil. விளையாட்டுச்செய்திகள்.

பிப்.26: 7 வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.

WWCT20I WIvsPak

இன்றைய ஆட்டத்தில் பிரிவு ‘பி’யில் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் 8-வது போட்டி கான்பராவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மேற்கு இந்திய தீவு அணியினர் பாகிஸ்தானின் பந்து வீச்சை எதிர்கொள்ள திணறினார்கள்.

20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதிகபட்சமாக டெய்லர் மற்றும் கேம்பள்ளே இருவரும் தலா 43 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நிடா தார், பாய்க் மற்றும் அன்வர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 127 ரன்கள் 18.2 ஓவர்களில் வெற்றியை எட்டியது.

பாகிஸ்தானில் அதிகபட்சமாக கேப்டன் மருஃவ் 38, ஜவேரிய கான் 35, முனீஃபா அலி 25 ரன்களும் எடுத்தனர்.

மேற்கு இந்திய தரப்பில் ஃபளட்சரும் டைலரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மேற்கு இந்திய தரப்பில் 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியும் பாகிஸ்தான் வீராங்கனைகள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ஜவேரியா கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். பாகிஸ்தான் அணி உலககோப்பையில் ஆடிய முதல் ஆட்டமே வெற்றியுடன் தொடங்கியது.

மேற்கு இந்திய அணி உலககோப்பையில் இது இரண்டாவது ஆட்டம். முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டம் சோகத்தில் முடிந்தது.

இன்று நடைபெற்ற பிரிவு ‘பி’ யில் இன்னோரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தாய்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி ஹிதர் நைட் 108 (66 பந்து), சிவர் 59 ரன்கள் (52 பந்து) அதிரடியுடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தாய்லாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹீதர் நைட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மகளிர் உலககோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM P W L P
IND : 2 2 0 4
NZ : 1 1 0 2
AUS : 2 1 1 2
SL : 2 0 2 0
BAN : 1 0 1 0

பிரிவு பி

TEAM P W L P
ENG : 2 1 1 4
PAK : 1 1 0 2
RSA : 1 1 1 2
WI : 2 1 1 0
THAI : 2 0 2 0

Previous articlecook with comali bala: பட வாய்ப்பு கொடுத்த வனிதா!
Next articleActress Malavika Mohanan Photos
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here