Home சினிமா கோலிவுட் Thala Ajith: நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை பின் தொடரும் விஜய்!

Thala Ajith: நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை பின் தொடரும் விஜய்!

598
0
Vijay Follows Thala Ajith

Thalapathy Vijay; நிதியுதவி செய்வதிலேயும் அஜித்தை காப்பியடித்த தளபதி விஜய்! நடிகர் விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்து அஜித்தை பின்பற்றியுள்ளார் என்று #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்து ரசிகர்கள் முன் #RealHeroThalapathyVIJAY ஆக தோற்றமளிக்கிறார்.

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

ஆனால், டுவிட்டரில், #அஜித்தைபின்தொடரும்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. காரணம், சமீபகாலமாக விஜய், அஜித்தின் வழியைத் தான் பின்பற்றி வருகிறார்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று செல்ல வேண்டும் என்பதற்காக கோட், சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது கொரோனா நிதியுதவிலேயும் அப்படியே செய்துள்ளார். ஆம், அஜித் 50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

மேலும், தொலைக்காட்சி தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.2.5 லட்சம், தமிழ் சினிமா பிஆர்ஓ தொழிற்சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் மற்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு ரூ.2.5 லட்சம் என்று ஒட்டு மொத்தமாக ரூ.1.32,50,000 (தோராயமாக ரூ.1.33 கோடி) கோடி வரையில் வழங்கியுள்ளார்.

அஜித்தை பின்பற்றி தான் தற்போது விஜய் நிதியுதவி அளித்துள்ளார்.

அதுவும் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரூ.50 லட்சம் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது விஜய் அளித்த மொத்த நிதியுதவியில் ரூ.1.80 கோடியாக எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நிதியுதவி அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில், #RealHeroThalapathyVIJAY, #Master, #அஜித்தைபின்தொடரும்விஜய் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here