Home சினிமா கோலிவுட் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மாஸ்டர் நியூ போஸ்டர் வெளியீடு!

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மாஸ்டர் நியூ போஸ்டர் வெளியீடு!

374
0
Master Poster

Master New Poster; விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: மாஸ்டர் நியூ போட்டோ வெளியீடு! விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிகில்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக மாஸ்டர் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இன்றுவரை திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இன்று விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மாஸ்டர் டிரைலரும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், தான் மாஸ்டர் படக்குழுவினர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டரில், விஜய் தனது சட்டை காலரை பிடிப்பது போன்றும், மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleநம்பர் ஒன் இடத்தில் தளபதி: ஹலோவில் டிரெண்டான ஹேஷ்டேக்குகள்!
Next articleவிஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: புதிய சாதனை படைத்த தளபதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here