Thuppakki 2 Motion Poster; இதோ வந்துருச்சு துப்பாக்கி 2 மோஷன் போஸ்டர்: வைரலாகும் வீடியோ! விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
ரசிகர்கள் உருவாக்கிய துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 65 ஆவது படமான தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார்.
இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படம் துப்பாக்கி படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
இந்த நிலையில், ஏ2 ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட தளபதி விஜய்யின் துப்பாக்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் போஸ்டரில் துப்பாக்கி 2 படத்தின் யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார் என்பது மட்டும் கொண்ட வீடியோ உள்ளடங்கியுள்ளது.
எனினும் இது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்பதால், வேறு எந்த தகவலும் இல்லை. இதனை ஏ2 ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.