ஆயிரக்கணக்கான இரசிகர்களை கொண்ட பிரபல டிக்-டாக் நட்சத்திரம் “இரவுடி பேபி சூர்யா” தற்கொலை முயற்சி.
இந்த டிக் டாக் பிரபலம் சூர்யா சமீபத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
கொரோனா சட்டப்படி வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர்கள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைபடுத்தல் முகாமில் இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கோவையில் தனிமைபடுத்தல் முகாமில் இருக்க வேண்டிய சூர்யா எப்படியோ தப்பித்து தன் சொந்த ஊரான திருப்பூர் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறையினர் “இரவுடி பேபி சூர்யா”வை கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கூறியுள்ளனர்.
இதற்கு மறுத்த சூர்யா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிகழ்வு டிக்-டாக் பயணாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.