Trisha Quarantine Dance; டிக் டாக்கில் த்ரிஷா: டான்ஸ் ஆடி குஷிப்படுத்தும் வீடியோ! லாக்டவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியாது என்பதால் த்ரிஷா டிக் டாக்கில் டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
டிக் டாக்கில் டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவிட்டு நடிகை த்ரிஷா ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
உலகமே கொரோனா அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் 18,601 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 590 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 3,252 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
அதோடு, அவர்கள் பிஸியாகவும் இருக்கின்றனர். ஆம், சமையல் செய்வது, ஓவியம் வரைவது, உடற்பயிற்சி செய்வது, தோட்டத்தை பராமரிப்பது, விவசாயம் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் த்ரிஷா டிக் டாக்கில் டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
டிக் டாக்கில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்து, புதிது புதிதாக டான்ஸ் ஆடும் வீடியோவை இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
த்ரிஷா கிருஷ்ணன் என்ற பெயரில் டிக் டாக் அக்கவுண்ட் வைத்திருக்கும் த்ரிஷா, இதுவரை 5 வீடியோக்களை பகிர்ந்துள்ளார். தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கறுப்பு நிற பேண்ட், சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் சட்டையும் அணிந்தபடி இங்கிலீஸ் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.