Vadivelu; கிங் பட காமெடியை பதிவிட்டு வாழ்த்து சொன்ன வடிவேலு! விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு வடிவேலு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு, வடிவேலு விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சியான் என்று அழைக்கப்படும் விக்ரம் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
தற்போது கோப்ரா படத்தில் நடித்து வரும் விக்ரமுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலு அவருடன் இணைந்து நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடிவேலு வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு என பதிவிட்டுள்ளார்
அதே போன்று ரசிகர்களும் HBD Vikram என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.