Valimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்
வலிமை (Valimai) படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.
வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்
வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், டுவிட்டரில் வலிமை, அஜித், ஹெச் வினோத் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.