பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி! பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வாணி ஸ்ரீ.
உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுவும் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வாணி ஸ்ரீ ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
இவருக்கு அபிநய வெங்கடேஷ் கார்த்திக் என்ற மகனும், அனுபமா என்ற மகளும் இருக்கின்றனர்.
அபிநய வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள அவரது பண்ணை வீட்டில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருமே சென்னையில் வசித்து வந்துள்ளனர். வெங்கடேஷ் கார்த்திக்கின் மனைவியும் ஒரு மருத்துவர்.
கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வந்த வெங்கடேஷ் கார்த்திக் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபிநய வெங்கடேஷ் காத்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.