Home சினிமா கோலிவுட் வனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்!

வனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்!

310
0
Vanitha Kasthuri Issue

Vanitha Kasthuri Issue; வனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்! நடிகை வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

வனிதா மற்றும் கஸ்தூரி இருவரும் டுவிட்டரில் மோதிக் கொண்ட காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் வந்தார்.

அண்மையில், பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதா – பீட்டர் பால் திருமணம் மிகவும் எளிமையாக கிறிஸ்துவ முறைப்படி நடந்தது.

இந்த திருமணம் டுவிட்டரில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் அரங்கேற்றி வருகிறது. ஆம், வனிதாவின் திருமணம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதற்கு தனது சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்று வனிதா எச்சரித்தார்.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து கஸ்தூரி வனிதா திருமணம் குறித்து விமர்சித்து வருகிறார். இது குறித்து கஸ்தூரி கூறியிருப்பதாவது:

லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும் போது இதயத்தில் ரத்தம் கசிகிறது. வனிதாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார் என்றார்.

இதற்கு பதிலளித்த வனிதா, எனது சொந்த வாழ்க்கையில், தலையிட முயன்றால், உங்களது வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டினார்.

இதற்கு பதில் கொடுத்த கஸ்தூரி எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை.

உங்களைப் போன்று சீசன் 1.2.3 என்று மெகா சீரியல் வாழ்க்கை என்க்கில்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர். உங்களைப் பிரபலபடுத்த என்னை பயன்படுத்த வேண்டாம் என்றார்.

இதற்கு வனிதா, எனது டுவிட்டர் பக்கத்திலிருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன் என்றும் காமெடி பீஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஒரு கல்யாணத்துக்கு இந்த அக்கப்போறா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதோடு, போதும் போதும் உங்க சண்டையை இருந்துங்க என்று கூறியுள்ளனர்.

Previous articleஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த திருக்கோவில்!
Next articleமாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here