Home சினிமா கோலிவுட் மாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

மாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

297
0
Rajinikanth Lamborghini car Drive

Rajinikanth Lamborghini Car Drive; மாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்! மாஸ்க் அணிந்து லம்போர்கினி என்ற சொகுசு கார் ஓட்டிச் சென்ற ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு டிரைவர் இல்லாமல் தானே கார் ஓட்டிச் சென்ற ரஜினிகாந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 6ம் கட்ட லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி தங்களது அன்றாட பணிகளை வீடியோ எடுத்தும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு காலகட்டத்தின்போது, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

அப்போது மெழுகுவர்த்தியுடன் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே வந்து மெழுகுவர்த்தி ஏந்தி ரஜினிகாந்த் நின்றிருந்தார். அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை.

இந்த நிலையில், ரஜினிகாந்த் தற்போது வெளியில் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லம்போர்கினி சொகுசு காரில், டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி ரஜினிகாந்த டிரைவ் செய்கிறார். அவர் மாஸ்க் அணிந்து இருப்பதும் தெரிகிறது.

அவருக்கு அருகில் இருந்து யாரோ அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை ரஜினி ரசிகர்கள் #LionInLamborghini என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு, டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியான பிறகே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்!
Next articleநடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் 19 ஆவது ஆண்டு நினைவு தினம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here