Vijay; மாஸ்டர் படத்தை விஜய்யையே எடுத்து முடிச்சியிருப்பதாகவும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படம் எடுப்பதற்கு முன்னதாகவே படம் ரூ.200 கோடி வசூலித்ததாகவும், அந்தப் பணத்தை வைத்தே மாஸ்டர் படத்தை எடுத்து முடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது மட்டுமே அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், உண்மையில், இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தனது சொந்த செலவில் தயாரிக்கவில்லையாம்.
பிகில் படம் கொடுத்த ரூ.300 கோடி வசூல் காரணமாக, நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக ரூ.400 கோடிக்கும் அதிகமாகவே வசூல் செய்யலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதே போன்று, அந்த பெரிய தொகை யாரோ ஒருவருக்கு போவதை விட நமது குடும்பத்திற்கே வந்தால் என்ன என்று விஜய் கணக்கு போட்டுள்ளாராம்.
அந்த அடிப்படையில் தான் மாஸ்டர் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
மாஸ்டர் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆல் ஏரியாவுக்கு ரூ.200 கோடி வரையில் வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள்.
அந்தப் பணத்தை வைத்தே படத்தையும் முடித்துள்ளார்கள். ஆனால், செலவு மட்டும் ரூ.130 கோடி மட்டுமே.
ஆக மொத்தத்தில் கை காசு போடாமலேயே லாபம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், மாஸ்டர் படம் அடுத்தமாதம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பிதான் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
பிகில் ரூ.300 கோடி போச்சு, அதே போன்று இந்தப் படமும் கொஞ்சம் கூடுதலாக ரூ.400 கோடி வரை லாபம் பார்க்கலாம் என்று கணக்கு போட்ட விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஆம், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மேலும், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியே ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உடனே திரையரங்குகளை திறப்பது என்பது சாத்தியமற்ற செயல். இதனால், மாஸ்டர் படம் எப்படியும் திரைக்கு வருவதற்கு குறைந்தது 3 மாத காலம் ஆகும்.
10 வட்டிக்கு கடன் வாங்கி மாஸ்டர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் விஜய்க்கு போன் செய்து 3, 4 மாதம் கழித்து படம் திரைக்கு வந்தால் ஒன்றும் கட்டுபடி ஆகாது.
400 அல்ல ரூ.500 கோடிக்கு மேல் படம் ஓடினாலும் லாபம் 10 பைசா கூட கிடைக்காது.
எல்லாமே வட்டி கட்டவே சரியாக போகும். ஆதலால், நாங்கள் வாங்கிய உரிமையை திரும்ப கொடுக்கிறோம். நீங்கள் பணத்தை திரும்ப கொடுங்கள் என்று விஜய்யிடம் கேட்டுள்ளார்கள்.
விநியோகஸ்தர்கள் கொடுத்த ரூ.200 கோடியை வைத்துதான் மாஸ்டர் படமே எடுத்திருக்கிறார்கள். இப்போது பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.
தனக்கு போன் செய்த விநியோகஸ்தர்களுக்கு விஜய் ஆறுதலாக நாளு வார்த்தை கூறி போனை ஆப் செய்துள்ளார். அதன் பிறகு விஜய்க்கு போன் செய்தால் அவர் போனை எடுப்பதில்லையாம்.
அதனால், விரக்தியடைந்த விநியோகஸ்தர்கள் வட்டி கட்ட முடியாமல், கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்க்கு எதிரியான பாஜக பிரமுகரை அணுகியுள்ளார்களாம்.
எப்படியாவது பணத்தை வாங்கி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார்களாம். ஏற்கனவே விஜய், பாஜக இடையே பஞ்சாயத்து இருக்கும் நிலையில், தற்போது லண்டு போன்று வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை என்ன சும்மாவா விடுவார்கள்.
இதனால், பணத்தை வாங்கிக் கொடுக்க அந்த முக்கிய பாஜக பிரமுகர் விஜய்க்கு தொந்தரவு கொடுக்கிறாராம். இதனால், விஜய் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வருகிறது.
வட்டிக்கு பணம் வாங்கி படத்தின் உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்களை குறை கூற இயலாது. வட்டி அதிகமான அவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலை கூட உருவாகலாம்.
இதனால், விஜய் அவர்கள் பணத்தை திருப்பி கொடுத்தால் நல்லது என்று கூறப்படுகிறது.