Home சினிமா கோலிவுட் விஜய்யை பார்க்க சேர்த்து வச்ச பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயசு சிறுவன்!

விஜய்யை பார்க்க சேர்த்து வச்ச பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயசு சிறுவன்!

1748
0
Vijay Fan Corona Help

Thalapathy Vijay Fan Upanishanth; விஜய்யை பார்க்க சேர்த்து வச்ச பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த 12 வயசு சிறுவன்! தளபதி விஜய்யைப் பார்ப்பதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3000 பணத்தை, 12 வயது நிரம்பிய சிறுவன் கொரோனா பாதிப்புக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

தளபதி விஜய்யைப் பார்க்க சேர்த்து வைத்திருந்த 3000 ரூபாயை 12 வயது சிறுவன் கொரோனா பாதிப்புக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவிக்குமார் – ஜோதிமணி. இவர்களுடைய மகன் உபநிசாந்த். எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஒரு நீச்சல்வீரன். மாவட்ட, மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.

இவ்வளவு ஏன், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக முதல் பரிசாக பெற்ற 3000 ரூபாயை கொரோனா பாதிப்பு முதல்வரின் நிவாரண நிதிக்கு உபநிசாந்த் கொடுத்து மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளான்.

முதல்வரின் வங்கிக் கணக்குக்கு டிடி எடுத்த கையோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைச் சந்தித்து சிறுவன் பாராட்டு பெற்றிருக்கிறான்.

இது குறித்து உபநிசாந்தின் தந்தை கூறுகையில், ஒவ்வொரு நாளும், நாட்டில் நடக்கும் பாதிப்பு குறித்து டிவியில் பார்த்துக் கொண்டிருந்த எனது பையன் நம்மளே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நம்மை விட கஷ்டப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று எனது பையன் சொன்னான். அதற்கு நான், நம்மிடம் காசு, பணம் இருந்திருந்தால் நாமும் உதவி செய்திருக்கலாம் என்று சொன்னேன்.

அதற்கு, நான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுக்கலாம் என்றா. அதற்கு நானும் ஓகே சொன்னேன்.

மேலும், உபநிசாந்த், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதுவரை பணம் சேர்த்து வைத்திருந்தான்.

அந்தப் பணத்தைத்தான் தற்போது முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்திருக்கிறான் என்று பெருமையோடு பேசினார்.

SOURCER SIVAKUMAR
Previous articleபிரதமரை கமலஹாசன் விமர்சித்துள்ளார்
Next articleInternational Day for Mine Awareness and Assistance 2020 theme

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here