Home சினிமா கோலிவுட் தூய்மைப் பணியாளர்களின் காலை கழுவிய விஜய் ரசிகர் மன்ற தலைவர்!

தூய்மைப் பணியாளர்களின் காலை கழுவிய விஜய் ரசிகர் மன்ற தலைவர்!

323
0
Vijay Fan Club Activities

Vijay Fan Club Activities; நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுடன் உரையாடல், உடற்பயிற்சி செய்வது, யோகா, சமையல் செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில், விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் தூய்மைப் பணியாளர்களின் கால்களை கழுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் விஜய் ரசிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அரிசி, காய்கறி, தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை கொடுத்து உதவி வருகின்றனர்.

Vijay Fan Club Activities

Vijay Fan Club Activities

SOURCER SIVAKUMAR
Previous articleCorona Lockdown; மகனை காப்பாற்ற 1200km பைக் ஓட்டிய தாய்
Next articleபுதிய படங்களை ஓரங்கட்டி சாதனை படைத்த விஜய்யின் கில்லி: டிஆர்பியில் நம்பர் 1!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here