Home சினிமா கோலிவுட் விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி!

விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி!

310
0

Vijay RRR Movie; விஜய் என் படத்திலா? மௌனம் கலைத்த ராஜமௌலி! ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிப்பது குறித்து வெளியான தகவலுக்கு தற்போது ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறித்து வெளியான தகவலுக்கு இயக்குநர் ராஜமௌலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

ராம் சரண் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று அண்மையில் செய்தி வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜமௌலி விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விஜய் தனது படத்தில் நடிக்கவில்லை. இது வெறும் வதந்திதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததால், அதன்படி வெளியிடப்பட்டது.

உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது போஸ்டர் வெளியிட்டது கொஞ்சம் வருத்தம்தான் என்றார். இதையடுத்து, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகால்மேல் கால் போட்டு கெத்தா போஸ் கொடுத்த விஜய் சேதுபதி: உப்பெனா அப்டேட்!
Next articleகுழந்தைக்கு இப்படியொரு பேர வச்சு எல்லோரையும் அசத்திய ஆல்யா மானசா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here