Home சினிமா கோலிவுட் மாஸ்டர் இசை வெளியீடு இங்குதான் நடக்கிறது: இதோ அழைப்பிதழ்!

மாஸ்டர் இசை வெளியீடு இங்குதான் நடக்கிறது: இதோ அழைப்பிதழ்!

435
0
Master Audio Launch Invitation

Master Audio Launch Invitation; மாஸ்டர் இசை வெளியீடு சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடக்க இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர் (Master). உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு நாடே தயாராகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது. இதனை சன் தொலைக்காட்சி தங்களது சேனலில் நேரலை செய்கிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஆனால், எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், மாஸ்டர் இசை வெளியீடு மார்ச் 15, 2020 பிற்பகல் 3 மணிக்கு தி லீலா பேலஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் கார்டில் இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதுதான் நுழைவு வாயில் அனுமதி சீட்டு என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு பிகில் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch Invitation) விழாவில் டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை பலரும் கலர் ஜெராக்ஸ் எடுத்து மிஸ் யூஸ் செய்தனர்.

அதனை தவிர்க்கும் வகையில், ஸ்மார்ட் கார்டு வாயிலாக அனுமதிக்கான அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஆக்சிஸ் பேங்க் உட்பட 10 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாக உள்ளது
Next articleவேட்டையாடு விளையாடு 2வில் கமல் – கவுதம் மேனன் கூட்டணி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here