Vijay Sethupathi Speech; சாமிக்காக சண்டை போடுறாங்க கூட பழக வேண்டாம்: விஜய் சேதுபதி! மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி தாமதமாக வந்தார். அப்போது பேசிய அவர், சாண்டியின் நடனத்தை பாராடினார்.
குட்டி ஸ்டோரி பாடலை தான் பாடவில்லை என்றார். ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரது இடத்திற்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் போது தனது பெயருடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் பெயரும் வர வேண்டும் என்றார் விஜய். அவர் ஒரு நல்ல மனிதர்.
படப்பிடிப்பின் போது எதுவுமே பேசமாட்டார். எப்போதுமே அமைதியாகவே சிரித்துக்கொண்டே இருப்பார். நான் அவரிடம் கேட்டேன்.
ஏன் சார் பேசவே மாட்டீங்கிறீங்க என்றேன். அதற்கு, அவர் சொன்னார். நான் எதையுமே உன்னிப்பாக கவனிப்பவன் என்றார். எனக்கு என்ன வருகிறதோ அதையே செய்யச் சொன்னவர்.
முதன் முதலில் நான் அவரை ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனது நண்பரின் அம்மா வந்து என்னிடம் காமராஜர் அரங்கில் ஏதோ விழா நடக்கிறது என்று அதற்குரிய டிக்கெட்டை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு காமராஜர் அரங்கிற்கு சென்றேன். அப்போதுதான் அவரை நான் பார்த்தேன் என்றார்.
முதலில் நான் லேட்டாக வந்ததற்கு காரணம் என்னதுனா, திருநெல்வேலி ஷூட்டிங்கிலிருந்து ஓடி வந்தேன். அதான் லேட்டாக ஆகிவிட்டது.
மறுபடியும், அங்கு கிளம்பவேண்டும். ஏனென்றால், ஷூட்டிங் இருக்கு. இதை சொல்லவில்லை என்றால், அப்புறம் வதந்தி பரப்பிவிடுவார்கள் என்றார்.
மேலும், சக மனிதனை, கலைஞனை மதிக்கத் தெரிந்த ஒருவர்தான் விஜய். அவருடன் பணியாற்றியது எனக்கு அருமையான தருணம்.
அவர் எப்போதும் ஸ்மார்ட், சூப்பராக, அழகாக இருப்பார். தேவைப்படும் நேரத்தில் வெட்கமும் படுவார். புரோமோஷனுக்காக ஒரு ரெய்டு நடந்தது.
கொரோனா வைரஸ் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். மனதை மட்டும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும்.
மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான். வேறு யாரும் வரமாட்டார்கள். கூடப்பிறந்த உறவினர்கள் கூட நம்மை தொட்டு பேசுவதற்கு தயங்கும் இந்த நேரத்தில் நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி.
சாமிக்காக சண்டை போடுறவங்க கூட மட்டும் பழக வேண்டும். சாமியை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள்.
மனிதத்தையும், மனித நேயத்தையும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் மதம் அவசியமில்லை என்பதை காட்டுங்கள் என்றார். மேலும், தனது பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்று குறிப்பிட்டார்ர்.
அதோடு, தனது ரசிகர்களுக்கு மட்டும் குறைவான பாஸ் கொடுக்கப்பட்டதாகவும், சேவியர் பிரிட்டோவின் ரசிகர்களுக்கும், குழுவினருக்கும் மட்டும் அதிகளவில் பாஸ் கொடுக்கப்பட்டதாகவும் நக்கலாக பேசினார்.
சேவியர் பிரிட்டோ ஒரு அறிவாலி. அறிவுக் களஞ்சியம். அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இறுதியில், அனைவருக்கும் நன்றி என்று கூறினார் மேடையை விட்டு இறங்கிச் சென்றார். இந்நிகழ்ச்சிக்கும் வரும் போது விஜய்யை கட்டியணைத்தார்.
விஜய், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.