Home சினிமா கோலிவுட் விஷ்ணு கேட்ட வாய்ப்பு: கலாய்த்த சாந்தனு!

விஷ்ணு கேட்ட வாய்ப்பு: கலாய்த்த சாந்தனு!

295
0
Oru Chance Kudu Single

Vishnu Vishal; விஷ்ணு கேட்ட வாய்ப்பு: கலாய்த்த சாந்தனு! இயக்குநர் கௌதம் மேனனிடம் தனக்கு பட வாய்ப்பு தரும்படி நடிகர் விஷ்ணு விஷால் வாய்ப்பு கேட்டுள்ளார். இதனை கலாய்க்கும் வகையில், சாந்தனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு இயக்குநர் கௌதம் மேனனிடம் பட வாய்ப்பு கேட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு சான்ஸ் குடு பொண்ணு என்ற பாடல் வெளியானது. நடிகர் சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் இந்தப் பாடலில் நடித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடலில் கானா குணா இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், யூடியூப்பில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் பாடலுக்கு நடிகர் விஷ்ணு விஷால் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு, டுவிட்டரில், கௌதம் மேனன் இயக்கத்தில் தனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதைக்  கண்ட சாந்தனு நான் பிட்டு போடலாம் என்று நினைத்தேன் அதற்குள்ளாக நீ முந்திக்கிட்டீயா என்று ஜாலியாக பதில் டுவீட் போட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here