Home சினிமா கோலிவுட் Visu: சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்!

Visu: சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்!

419
0
Visu Passed Away

Visu Passed Away; சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்! விசு உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானர்.

தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளைக் கொண்ட விசு இன்று சென்னையில் காலமானார்.

கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சி தொடரிலும் பங்கேற்றுள்ளார்.

விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு சிறந்த  தமிழ் படத்திற்கான பிலிம் பேர் விருது கிடைத்துள்ளது.

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக இன்று மாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். விசுவின் மறைவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விசுவிற்கு கிஷ்மு, ராஜாமணி மற்றும் குரியகோஸ் ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். மூவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா?
Next articleஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here