பொதுவாக சினிமா என்று எடுத்துக் கொண்டால், ஹீரோ, ஹீரோயின்கள் ஆகியோருக்குதான் அதிக மவுசு. அவர்களுக்குத்தான் சம்பளமும் அதிகம்.
சினிமாவைப் பொறுத்தவரை காதல், குடும்பக் கதை, ஆக்ஷன், டிராமா, காமெடி என்று எந்தக் கதையாக இருந்தாலும் சரி முக்கியத்துவம் பெறுவது ஹீரோ, ஹீரோயின்.
இதுவே வெறும் ஹீரோயினை மையப்படுத்திய படம் என்றால், அவர்களது நடிப்பு, கதை இரண்டும் பேசப்படும்.
ஹீரோயினை மையப்படுத்திய படத்தில் நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி, கீர்த்தி சுரேஷ், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். பெரும்பாலும் நம்பர் ஒன் நடிகைதான் ஹீரோயினை மையப்படுத்திய படத்தில் அதிகளவில் நடித்துள்ளார்.
சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் இருந்து ஹீரோயின் வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. மாறாக மற்ற மொழிகளைச் சேர்ந்த நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அதிகளவில் காலூன்றி வருகின்றனர்.
அவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா, ஹன்சிகா மோத்வானி, நஸ்ரியா, ரம்யா பாண்டியன், அனுஷ்கா, அஞ்சலி, ஸ்ருதி ஹாசன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது தமிழ் சினிமாவின் ராணி யார் என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இதில், நயன்தாரா, சமந்தா, ரம்யா பாண்டியன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா, தமன்னா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. மேலும், தமிழ் சினிமாவின் ராணி யார் என்று வாக்கு சேகரிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் மட்டும் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ரம்யா பாண்டியனை வருங்கால தலைவி என்று பலரும் அழைக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். விஜய், அஜித், ரஜினிகாந்த் என்று மாஸ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
சமந்தாவும் அப்படித்தான். மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், கடந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு ஹீரோயினும், ஒவ்வொரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும், ரசிகர்களின் விருப்பமே, தமிழ் சினிமாவின் ராணி யார் என்று தீர்மானிக்கிறது.