Home Latest News Tamil சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைக்கக் காரணம் ரஜினிகாந்த்

சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைக்கக் காரணம் ரஜினிகாந்த்

408
0
சுசீந்திரன்

சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைக்கக் காரணம் ரஜினிகாந்த்

இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.

நல்ல தரமான இயக்குனர் எனத் தனக்கென தனி முத்திரையையும் பதித்துள்ளார். நேற்று திடீரென ஒரு ட்விட் செய்து பரபரப்பை கிளப்பிவிட்டார்.

அவர் ஏன் அவ்வாறு திடீரென் ட்விட் செய்தார் எனப் புரிந்து கொள்ளாமல் அஜித் ரசிகர்கள் அவரை வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டனர்.

யார் அந்த தலைவா?

மார்ச் 16 2019, 09:03 மணிக்கு சுசீந்திரன் ஒரு ட்விட் ஒன்றைச் செய்தார். அதில் தலைவா வா… வி ஆர் வெய்டிங் என்ற கேப்சனுடன் “வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே தலைவனாக முடியும்” என்ற வாசகத்துடன் உள்ள புகைப்படத்துடன் ட்விட் செய்தார்.

சுசீந்திரன் தலைவா எனக் குறிப்பிட்டதும் ரஜினியைத் தான் தலைவா எனச் சொன்னார் என ரஜினி ரசிகர்கள் அரவக்கோளாறில் ரீட்வீட் செய்தனர். கமெண்டுகள் நிரம்பி வழிந்தன.

கமல் ரசிகர் கேள்வி?


மார்ச் 16-ம் தேதி கமல் ரசிகர் ஒருவர் இதில் நீங்கள் தலைவான்னு குறிப்பிட்டது யாரை எனக் கேள்விகேட்டு 2017-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியைக் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பேட்டியில் சினிமாத் துறையில் இருந்து அடுத்த முதல்வராக கமல், அஜித் வந்தா நல்ல இருக்கும் எனக் கூறியிருந்தார் சுசீ.

எனவே கமல் ரசிகரின் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் சுசீந்திரன்.

ஏனெனில், அவர் ரஜினியைத் தான் தலைவா எனக் குறிப்பிட்டார் என ஒரு டாக் சென்று கொண்டு இருந்தது.

அடுத்த டிவிட்டில் அண்ணன் அஜித்குமார் ரசிகர்களுக்கு என்று சஸ்பென்ஸ் வைத்து ஒரு ட்விட் செய்கிறார்.

அஜித் அரசியலுக்கு வர வேண்டும்!

அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு ட்விட். அந்த ட்விட் தான் முழுக்க முழுக்க பரபரப்பாக மாறியது.


அதில் சுசீந்திரன் கூறியதாவது, “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

அவ்வளவு தான், சில அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் வரவேற்பு அளித்தாலும், எதிர்ப்பு அதிகமாகக் கிளம்பியது.

அரசியல் வேண்டாம் அஜித் போதும், தலைமை வேண்டாம் தல போதும் என்ற ஹேஷ்டாக்குகளை ட்ரெண்ட் செய்யத் துவங்கிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் ரஜினி ரசிகர்கள் சுசீந்திரன் மீது கடும்கோபம் அடைந்துவிட்டனர்.

ரஜினியைத் திட்டமிட்டே பழிவாங்க சுசீந்திரன் இப்படிச் செய்துவிட்டார் என ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்தனர்.

சுசீந்திரன் அஜித், கமலை அரசியலுக்கு அழைக்க நினைத்து அது ரஜினிக்கு பல்ப் கொடுக்கும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here