30 ஆயிரம் கோடியில் 40% 20,000 கோடி என்றும் இந்திய மக்கள் 8000 கோடி என்றும் உலறிய ஒய் ஜி மகேந்திரன் மகளான மதுவந்தி.
டந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் தான் முதல் முறையாக வைரஸ் தொற்று இருந்த ஒருவரை கண்டுபிடிக்கப்பட்டது.
வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
இந்த வைரஸ் காரணமாக உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுஶ்ரீ
அமெரிக்காவில் நேற்று ஒரு நாள் மட்டும் 1900 பேர் பலியாகி உள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு தலா 500 பேர்களுக்கு மேல் பலியாகி வருகிறார்கள்.
பிரான்சில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த வைரசுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறையாகியுள்ளனர்.
இந்த வைரசு தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி மார்ச் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து மெழுகுவர்த்தி எண்ணெய் விளக்கு மற்றும் டார்ச்லைட் போன்றவற்றை மக்களை எரியவிட சொன்னார் .
மக்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கொரோனாவை கொன்று விட்டதாகவும் நினைத்துக்கொண்டு. பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன.
இந்த நிகழ்வு நடக்கும் முன்பு ஒய்ஜி மகேந்திரனின் மகளான மதுவந்தி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் “தனக்கு தெரிந்த சில விஞ்ஞானிகள் ஒன்பது கிரகங்களும் ஒரே கோட்டில் வருவதாகவும், அறிவியல் படி விளக்கேற்றினால் வைரஸ் இறந்துவிடும் என்பதாகவும் ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நெட்டிசன்கள் மதுவந்தியை வறுத்தெடுக்கும் அளவிற்கு கலாய்த்து எடுத்தார்கள்.
தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோவை வெளியிட்டார் மீண்டும் மதுவந்தி.
அந்த வீடியோவில் 30 ஆயிரம் கோடியில் 40% 20,000 கோடி என்றும், இந்திய மக்கள் 8,000 கோடி மக்கள் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி மோடி அளாத்தார் என்றும் அதிகாரப்பூர்வமான ஒரு புள்ளி விவரங்களை வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தார்.
முற்றிலும் தவறான கருத்தாகும். பள்ளிக்கூடம் சல்லாத குழந்தை சொல்லும் கணக்காக இருந்தது.
இதை அவர் சீரியஸாக வேற பேசினார் என்பதுதான் ஹைலைட் .அந்த வீடியோவை எடுத்தவுடன் மதுவந்தி மீண்டும் ஒருமுறை போட்டு பார்த்தாரா என்று கூட தெரியவில்லை.
ஆனால் வீடியோ அவரே எடிட்டிங் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற தவறான பதிவுகளை பதிவிடும் மதுவந்தியை அவரது தந்தையான ஒய்ஜி மகேந்திரன் கண்டிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் தவறான புள்ளி விவரங்களை வைத்து ஆதரவு தெரிவிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒன்று.
அதில் உள்ள தவறை மதுவந்தி உணர்ந்து இருப்பாரா என்பது அவர்தான் சொல்ல வேண்டும்.