Home சினிமா கோலிவுட் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு: என்ன கட்சியில் சேரப்போறாரா?

விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு: என்ன கட்சியில் சேரப்போறாரா?

599
0
Yogi Babu Wedding Reception

Yogi Babu Meet Vijayakanth; விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு: என்ன கட்சியில் சேரப்போறாரா? காமெடி நடிகர் யோகி பாபு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். கவுண்டமனி, செந்தில், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.

தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு (Yogi Babu Wedding) ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். யாரையும் அழைக்காமல் திடீரென்று யோகி பாபு திருமணம் செய்து கொண்டதால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.

ஆனால், தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், அதையும் மீறி, யோகி பாபு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் தயார் செய்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

யோகி பாபு கட்சியில் இணைவதற்கு அங்கு சென்றாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இல்லை இல்லை அவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

யோகி பாபுவின் திருமண வரவேற்பு (Yogi Babu Wedding Reception) நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜயகாந்தை சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அ  ழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார்.

அப்போது, விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் மற்றும் இயக்குநர் முத்துக்குகுமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleநயகரா நீர்வீழ்ச்சி எனும் அதிசயம்
Next articleரவுடி பேபி பாடல் 800 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here