கடந்த வருடம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது யூடியூபில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம்தான் மாரி.
இது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை ஆனாலும் தனுஷின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது.
அதனால் மீண்டும் அதே கூட்டணி மாரி 2 என்ற படத்தில் இணைந்தனர். முதல் பாகத்தில் அனிருத்தின் இசை பெரும்வரவேற்பை பெற்றது.
டானு டானு சாங் அனிருத்தின் இசையில் தமிழ்நாடு எங்கும் ஒலித்தது. 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
இருப்பினும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை தேர்ந்தெடுத்தனர்.
இந்த செய்தி வெளியான முதல் தனுஷ் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
அப்போது நவம்பர் 28ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு ரவுடிபேபி லிரிகல் விடியோ வெளியிடப்பட்டது.
அது இசை பிரியர்கள் இடம் பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷும் தீயும் இணைந்து அப்பாடலை பாடியிருந்தனர்
தனுஷ் ஏற்கனவே ஆங்கிலம் கலந்து தமிழ் பாடல்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அவருடைய கொலைவெறி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உலக ரசிகர்களை கவர்ந்து இருந்தது
அதே பாணியில் எழுதப்பட்டு வெளியான இந்த ரவுடி பேபி லிரிகல் வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை சம்பாதித்தது.
பின் படம் வெளியாகி ஜனவரி இரண்டாம் தேதி 2019 ஆம் ஆண்டு இதனுடைய வீடியோ பாடல் வெளியிடப்பட்டது.
பிரபுதேவாவின் துள்ளலான நடன அமைப்பும் அதற்கு சற்றும் குறையாத தனுஷ் மற்றும் சாய்பல்லவி யின் அசாத்திய நடனத்தாளும் பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் பெரிதாக கவர்ந்தது.
அதனால் இந்த பாடல் ரிப்பீட் மோடில் கேட்டனர்
டிக் டாக்கிலும் இந்த பாடலுக்கு நிறைய பேர் சின்ன சின்ன வீடியோ செய்து இது மேலும் மேலும் பிரபலம் ஆக்கினர்.
இந்தப்பாடல் இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்தது.
அதனால் இந்த பாடல் 80 கோடி அதாவது 800 மில்லியன் பார்வையாளர்களை நேற்று மார்ச் 22 ஆம் தேதி கடந்தது.
இதுவே ஒரு தமிழ் பாடல் யூடியூபில் நிகழ்த்திய மிகப்பெரும் சாதனை என்றே சொல்லலாம்