Home சினிமா கோலிவுட் குட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்!

குட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்!

391
0
Kutty Nayan Kutty Vicky

Nayanthara; குட்டி நயன் குட்டி விக்கி: டிரெண்டாகும் ஹலோ ஹேஷ்டேக்! ஆப் மூலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் குட்டி பசங்களாக மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டி நயன் குட்டி விக்கி வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிதான் யாருக்கும் தெரியாது. ஏன் அவர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம்.

இது ஒரு புறம் இருக்க, நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில், நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வந்தது.

என்னது நயன் தாராவுக்கு கொரோனா என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில், இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், குட்டி நயன் குட்டி விக்கியாக இருக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஹலோவில் குட்டி நயன் குட்டி விக்கி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவைத் தொடர்ந்து, எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்ப்போம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்து விட்டது போல புகைப்படங்களை டிசைன் செய்த உங்களையும் அப்படித்தான் பார்க்கிறோம்.

ஹாய் நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம். மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் தான் இருக்கிறோம்.

உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் முட்டாள்தனமான ஜோக்குகள் ஆகியவற்றை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான அளவிற்கு வலிமையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Corona Virus

Previous articleலடாக் எல்லை பிரச்சனை, இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் படைத்தளபதிகள் மட்டத்திலான சந்திப்பு
Next articleHBD Thalapathy Vijay: NonPareilThalaAJITH நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here