Home சினிமா கோலிவுட் சமூக இடைவெளியில் வீடியோ கால்: விஜய், அனிருத், மாளவிகா மோகனன்!

சமூக இடைவெளியில் வீடியோ கால்: விஜய், அனிருத், மாளவிகா மோகனன்!

436
0
Master Team Video Call

Master Team Video Call; சமூக இடைவெளியில் வீடியோ கால்: விஜய், அனிருத், மாளவிகா மோகனன்! கொரோனா வைரஸ் தடுக்க 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படக்குழு சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறது என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. எனினும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Master Team Social Distance

இந்த நிலையில், விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடை வெளியை கடைபிடித்து வருவதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது டுவிட்டரில் மாஸ்டர் படத்தில் வரும் ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் ஹோ பாடலை பாதிவிட்டுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பிரச்சனை வரும் போகும்…கொஞ்சம் ரிலாக்‌ஷா இருங்க…எங்களால் வெளியில் போகமுடியவில்லையோ அப்போது நாங்கள் இப்படி சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு…நீங்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழ்நாட்டில் கொரோனா எந்தெந்த இடத்தில் எவ்வளவு பாதிப்பு ரிப்போர்ட்
Next article27/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here