Home சினிமா கோலிவுட் Master Third Look Poster: மாஸ்டர் கிளாஸ் லூக்

Master Third Look Poster: மாஸ்டர் கிளாஸ் லூக்

1232
1
Master Third Look Poster மாஸ்டர் கிளாஸ்

Master Third Look Poster: மாஸ்டர் கிளாஸ் ஆக வெளியாக உள்ளது. விஜய், விஜய்சேதுபதி இணைந்து இப்போஸ்டரில் இருக்கவேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Mastar Tamil Movie

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கைதி புகழ் அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள படம்  மாஸ்டர்.

இப்படத்தை மாநகரம் மற்றும் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். கத்தி திரைப்படத்திற்கு பிறகு அனிருத், விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது.

கைதி திரைப்படத்தின் தரமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது சினிமா இரசிகர்களுக்கு அதீத நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவர் வித்தியாசமான கதையைக்கூறி விஜய் அவர்களிடம் ஓகே வாங்கியிருப்பார் என்ற ஆவல் சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கே இருக்கிறது.

மேலும், வேறு மாதிரியான விஜய் அவர்களை மாஸ்டர் திரைப்படத்தில் பார்க்கலாம் என்ற எண்ணமும் ரசிகர்களிடத்தில் உள்ளது.

Master Third Look Poster

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் நாளை ஜனவரி 26-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகிறது.

ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் மாஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இரு போஸ்டர்களிலும் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே இருப்பார் தனித்தே மாஸ் & க்ளாஸ் ஒரு சேர காட்டியிருப்பார்.

இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் Third look போஸ்டரில் விஜய்சேதுபதியும் விஜய்யும் இணைந்து தோற்றமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் நாளை 5 மணிக்காக தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர் .

மாஸ்டர் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleTNPSC Group 4 முறைகேடு: தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்
Next articleகரோனா வைரஸ்: ஆறு நாட்களில் அதிநவீன மருத்துவமனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here