Nawazuddin Siddiqui; தனிமைப்படுத்தப்பட்ட பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக்! கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நவாசுதீன் சித்திக் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நவாசுதீன் சித்திக். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தார்.
இவர், மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்று படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும், தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்கு மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான புதானாவிற்கு சென்றுள்ளார்.
இதற்காக மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெற்று தனது குடும்பத்துடன் புதானாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு, முஜாபர் நகர் சுகாதாரத்துறை அதிகாரிகள் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. எனினும், நவாசுதீன் சித்திக்கை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.