Home சினிமா கோலிவுட் வந்தேன் டா பால்க்காரன்: 28 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை!

வந்தேன் டா பால்க்காரன்: 28 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை!

292
0
28YearsOfAnnamalai

Annamalai; வந்தேன் டா பால்க்காரன்: 28 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை! ரஜினிகாந்த், குஷ்பு ஆகியோரது நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகளை கடந்துள்ளது.

ரஜினிகாந்தின் அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, ரேகா, மனோரமா ஆகியோரது நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வந்த படம் அண்ணாமலை.

இந்தப் படம் கடந்த 1987 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாலிவுட் படமான Khudgarz படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுக்காரனாக வரும் அண்ணாமலையும், பணக்காரனாக வரும் சரத்பாபுவும் குழந்தை பருவம் முதல் நண்பர்கள்.

இவர்களது நட்பை பிரிக்கும் வகையில், சரத்பாபுவின் (அசோக்கின்) தந்தை ராதாரவி (கங்காதரன்) திட்டம் தீட்டி, அண்ணாமலை ரஜினியின் வீட்டை இடித்து நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் பணக்காரனாகும் ரஜினிகாந்த், உயர்கிறார்.

முதலில் அண்ணாமலை படத்தை இயக்குநர் வசந்த் இயக்க இருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணத்திற்காக அவரால் இந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதன்பின்னர் தான் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் படம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. இதன் காரணமாக போஸ்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் படம் வெளியாகி 175 நாட்கள் வரை ஓடியது. 1995 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் குவித்த படமாக அண்ணாமலை படம் திகழ்ந்தது. அதன் பிறகு வந்த ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை பட சாதனையை முறியடித்தது.

இந்த நிலையில், அண்ணாமலை படம் திரைக்கு வந்து இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஹலோவில், #28YearsOfAnnamalai என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Previous articleஹலோவில் டிரெண்டாகும் GVPrakash சைந்தவி பாடல்கள் ஹேஷ்டேக்!
Next articleமகனுடன் நடித்த விஜய் சேதுபதியின் சிந்துபாத்: #1YearOfSindhubaadh!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here