ரஜினியின் சிதம்பர ரகசியம்: ரஜினிக்கு தெரியுமா?
ரஜினியின் பேட்ட: சன் பிக்சர்ஸ் மேஜிக் எங்கே?
பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானபோது, சன்பிக்சர் மேஜிக் எங்கே என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டோம்.
சமீப காலமாக, ரஜினியின் செல்வாக்கு குறைந்துவிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். கபாலி மற்றும் காலா படங்களின் கதாப்பாத்திரம் அப்படி அமைந்துவிட்டது.
கபாலி படத்தின் பிளாஸ்பேக் ரஜினியை ரசித்தவர்களை விட, முதுமையான ரஜினியை ரசித்தவர்கள் மிகவும் குறைவு.
ரஜினியின் முதிய வயது தோற்றதை சிலர் பாராட்டினாலும், அதேபோன்ற தோற்றத்தில் காலா படத்தில் நடித்தார். காலா படம் படுதோல்வி.
காலா படத்தை, டிவியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை கூட குறைவுதான். ரஜினியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேகத்தையும், துடிப்பையும் தான்.
2.ஒ மற்றும் பேட்ட படங்கள் அதை நன்கு வெளிக்காட்டியுள்ளது. பழைய ரஜினியை திரையில் பார்பதையே அவருடைய ரசிகர்களும், மக்களும் விரும்புகின்றனர்.
அதேவேளையில், தற்பொழுதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்றபடி நடிப்பதே சிறந்தது. லிங்கா படத்தின் தோல்வியே அதற்கு உதாரணம்.
ரஜினிக்காக படம் ஓடும் என்பதைவிட, ரஜினியின் வேகத்திற்காக படம் ஓடுகிறது என்பதே ரஜினியின் சிதம்பர ரகசியம்.
2.ஒ படம் மற்றும் பேட்ட படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு ரஜினிக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ரஜினியின் சிதம்பர ரகசியமும் அதுதான்.
தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்பதே பலரின் விருப்பம். இன்னும் அவரால் பழைய வேகத்தில் நடிக்க முடியும், அதை முதலில் அவர் நம்ப வேண்டும்.