ரியல் கௌசல்யா (kowsalya murugesan), நெல்சன் திலீப்குமார் (nelson dilipkumar) கனா கதாப்பாத்திரங்கள் யார்?
கனா படத்தைப் பார்த்தவர்கள் மனதில், “யார் இந்த கௌசல்யா?” என்ற கேள்வி எழாமல் இருக்காது.
தமிழக விக்கெட் கீப்பர் ஒருவருக்கு கண்ணு போச்சா? இதுவரை எப்படி நமக்குத் தெரியம போச்சு!!!
இது ஒரு கற்பனைக்கதை. ஆனால், கற்பனை அல்ல. உண்மைகளை உல்ட்டாவாக்கிய திரைப்படம்.
படம் பார்த்த அனேகப்பேர், உண்மை என நம்பிவிட்டனர். அந்த அளவிற்கு ஆடியன்சை நம்பவைத்து, ‘கற்பனை பயோபிக்’ படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.
உண்மையான கௌசல்யா முருகேசன் யார்?
அவருடைய உண்மையான பெயர், ‘முருகேசன் திக்கேஸ்வஷங்கர் திருஷ் காமினி’ (Murugesan Dickeshwashankar Thirush Kamini).
தந்தை பெயர் வாசுதேவன் பாஸ்கரன். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். அதன் காரணமாகவே காமினியும் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்தார்.
காமினியின் கதாப்பாத்திரத்தை உல்டாவாக மாற்றியே கௌசல்யா கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2013-ல் கலந்துகொண்ட முதல் உலகக்கோப்பைப் போட்டியில், சதமடித்த இந்திய வீராங்கனை ஆவார். சுழற்பந்து வீச்சாளரும் கூட. தற்பொழுது, இந்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார்.
காமினி விலகியபின், 2017-ல் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் இறுதிப்போட்டியில் தோற்றது. இந்த அணியின் கோச் ரமேஷ் பவர்.
இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டுதான் கனா படத்தின் கதையை கற்பனையாக வடிவமைத்துள்ளார் அருண்ராஜா.
நெல்சன் திலீப்குமார் யார்?
சிவகார்த்திகேயன் நடித்த நெல்சன் திலீப்குமார் என்ற பெயர் அருண்ராஜாவின் நண்பர் பெயர். கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரின் பெயரையே சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரத்திற்கு சூட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன், எம்.எஸ்.தோனியின் சாயலிலேயே விளையாடுவார். அவரைப் போன்றே பவுலர்களுக்கு ஆலோசனை கூறுவார்.
2016-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியின்போது, டொனால்ட் வீசிய பந்து ஸ்டெம்பில் வேகமாகப்பட்டு, அதிலிருந்த பைல்ஸ் ஒன்று தோனியின் கண்ணைப் பதம் பார்க்கும்.
அக்காயத்துடனே, மங்கலான கண்ணுடனேயே தோனி விளையாடினார். மேலும், சர்வதேச போட்டியில் கண்களைப் பறிகொடுத்த விக்கெட்கீப்பர்கள் கிரேய்க் கீஸ்வெட்டரும் மார்க் பவுச்சரும் ஆவர்.
மார்க் பவுச்சர், நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடி பைல்ஸ் கண்ணில் பட்டு, கண்பார்வை இழந்தார். அத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
க்ரெய்க் கீஸ்வேட்டர் (Craig Kieswetter), நெல்சன் திலீப்குமாரை போன்றே ஒரே ஒரு சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர். பந்து, கெல்மெட்டிற்குள் புகுந்து கண்ணைத் தாக்கியதில் பார்வையிழந்தார்.
அதன்பிறகு க்ரெய்க் கீஸ்வேட்டர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒய்வுக்குப்பின், கோல்ப் வீரராக மாறினார். சிவகார்த்திகேயன் ஓய்வுக்குப்பின் கோச்சராக மாறுகிறார்.
தோனியையும் க்ரெய்க் கீஸ்வேட்டரையும் இணைத்தே நெல்சன் திலீப்குமார் கதாப்பாத்திரத்தை வடிமைத்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.