சமந்தா கர்ப்பம்: சர்ச்சைக்கு காரணம் ரசிகரே!
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே சமந்தா, கர்ப்பமாகியதாக வதந்தி பரவியது. ஆனால், அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.
மீண்டும் சமந்தா கர்ப்பம் என செய்தி பரவியுள்ளது. இப்படி ஒரு சர்சையைக் கிளப்பியவர் சமந்தாவின் ரசிகர்.
சமந்தா, கணவர் சைதன்யாவுடன் நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவ்வபோது அங்கிருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
அவ்வாறு, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். “Strolling into the new year.. 2019 ❤ Great expectations” எனவும் “The ‘ But why can’t I get a few pickles’ look” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
pickles, great expectations இந்த வார்த்தையைப் பார்த்த ரசிகர் ஒருவர் “சமந்தா நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
உடனே, சமந்தா கர்ப்பம் என மீடியாக்கள் செய்திகள் வெளியிடத் துவங்கிவிட்டனர். கோலிவுட், டோலிவுட் என செய்திகள் விரைந்து பரவி வருகின்றது.
ஆனால், இதுவரை சமந்தா இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த சர்ச்சைக்கு காரணம் முழுக்க முழுக்க அந்த ரசிகரே!!!
அந்த ஐ.டியில் ஒரு பெண்ணின் புகைப்படம் உள்ளத்தால் அவர் பெண் ரசிகராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது