Sivakarthikeyan Doctor Movie Stills; ஸ்டெதஸ்கோப் உடன் சிவகார்த்திகேயன்: வைரலாகும் டாக்டர் பட புகைப்படங்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாக்டர் படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர். கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது டாக்டர் படத்தின் புதிய புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், சிவகார்த்திகேயன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன் இருக்கும் புகைப்படமும், மெட்ரோ ரயிலில் யோகி பாபு உடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமும், ஹீரோயின் உடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், யோகி பாபுவும் நடித்து வருகிறார்.
பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார். அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது, டாக்டர் படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர், கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நானி நடிப்பில் வந்த கேங் லீடர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது டாக்டர் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
சேலையில், கியூட்டாக இருக்கும் பிரியங்கா அருள் மோகனின் டாக்டர் பட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.