Home சினிமா கோலிவுட் வெளியான 2 நாளில் இத்தனை மில்லியன் வியூஸா? சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

வெளியான 2 நாளில் இத்தனை மில்லியன் வியூஸா? சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

413
1
Soorarai Pottru Making Video

Soorarai Pottru Making Video; வெளியான 2 நாளில் இத்தனை மில்லியன் வியூஸா? சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ! சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்களில் யூடியூப்பில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்களில் யூடியூப்பில் 1 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நிலையில், சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவில் சூர்யா உடற்பயிற்சி செய்யும் காட்சிகள், டான்ஸ் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleZoom Cloud; வீடியோ கால் ஜும் ஆப் ஆபத்தானதா? உங்கள் மொபைலில் உள்ளதா?
Next articleகாதலில் விழுந்தேன் நடிகை சுனைனா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here