Home சினிமா கோலிவுட் விளக்குமாத்தால் அடிக்கணும், அப்போதான் புத்தி வரும்: பிரதமருக்கு சூரி வேண்டுகோள்!

விளக்குமாத்தால் அடிக்கணும், அப்போதான் புத்தி வரும்: பிரதமருக்கு சூரி வேண்டுகோள்!

317
0
Soori Corona PM Modi

விளக்குமாத்தால் அடிக்கணும்… அப்போதான் புத்தி வரும்: பிரதமருக்கு சூரி வேண்டுகோள்! வவ்வால், பாம்பையும் சாப்பிட்டவர்களை விளக்குமாத்தால் அடித்து விரட்ட வேண்டும் என்று சீன பிரதமருக்கு போன் போட்டு தெரியப்படுத்த வேண்டும் என்று சூரி இந்திய பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனாவுக்கு மாத்திர, மருந்து கண்டுபிடிச்சு விளக்குமாத்தால் அடிக்கணும் என்று சூரி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இந்தியாவில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காமெடி நடிகர் சூரியும், தனது மகன், மகளுடன் சேர்ந்து கொரோனா வீடியோ வெளியிட்டார்.

அதன் பிறகு வீட்டில் பிரியாணி செய்யும் வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பாத்ரூமில் தனது மகன் செய்யும் சேட்டைகளை எலலம் சகித்துக் கொண்டு அவனை குளிக்க வைக்கிறார். அப்போது, மோடி அய்யா உங்களைக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.

வெளியில் போனால் கொரோனா கொன்றுவிடும் என்கிறீர்கள். வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து, மாத்திரை கண்டுபிடித்து விளக்குமாத்தால் அடித்து அதை விரட்டிவிடுங்கள் அய்யா.

அப்படியே சீன பிரதமருக்கு ஒரு போன் போட்டு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாத்தால் அடிக்கச் சொல்லுங்கள்.

அப்போதான் புத்தி வரும் என்று கூறுகிறார். மேலும், கழிப்பறையைச் சுத்தம் செய்யத் தொடங்கும் சூரி, நான் ஒடம்புக்கு சோப்போட்டு குளிக்கமாட்டேன்.

இதுல இதெல்லாம் போட்டு தேய்க்கணுமா? என்று கூறுகிறார். தொடர்ந்து, நம்ம பசங்க போன கழிப்பறையை சுத்தம் செய்யும் போதே மூச்சு முட்டுகிறதே, நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அசுத்தத்திற்குள் இறங்கி, அதாவது பாதாள சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்கிறார்களே.

ஒவ்வொருவரது கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போதுதான் புரிகிறது. மனதாலும், உடலாலும், உணமையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதும் நல்லா இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleசர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனாவா?
Next articleலிஃப்டுக்குள்ளே கொரோனா: வைரலாகும் கொரோனா வைரஸ் பட டீசர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here