Vijay Sethupathy; விஜய் சேதுபதிக்கு ஸ்ரீமன் முத்தம்! விஜய் சேதுபதி-ஸ்ரீ மன்
சங்கத்தமிழன் படப்பிடிப்பின் போது நடிகர் ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் வைரலாகி வருகிறது. ஆனால், சங்கத்தமிழன் படப்பிடிப்பின் போது தான் விஜய் சேதுபதி ஸ்ரீமனுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில்,
நேற்றுடன் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி முதல் சிங்கிள் டிராக் வெளியாகி வைரலானது. இதையடுத்து, தற்போது இரண்டாவது சிங்கிள் டிராக் தயாராகி வருகிறது.
பொதுவாக, நடிகர்கள், எந்த ரசிகர்கள் கேட்டாலும், அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்வது, கை கொடுப்பது மட்டுமே செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், அதில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு. ஆம், எந்த ரசிகர் கேட்டாலும், அவர்களது கன்னத்தில் முத்தம் கொடுப்பதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகர் யார் விஜய் சேதுபதிதான்.
நானும் ரௌடி தான், சேதுபதி, தர்மதுரை, இமைக்கா நொடிகள், பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
ஹீரோவாக மட்டுமல்ல, சிறப்புத் தோற்றம் என்று எந்தவொரு ரோலாக இருந்தாலும், அதில் தனது பங்களிப்பை கொடுக்கக்கூடியவர்.
இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில், அவருக்கு வில்லனாகவே நடித்துள்ளார். தற்போது, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெறுவதற்கு முன்னதாக விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
விஜய்க்கு முத்தம் கொடுத்ததன் மூலம் 1,35,263 முத்தங்கள் வரை கொடுத்த ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விஜய் சேதுபதி-ஸ்ரீ மன்
தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், விஜய்யைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.ன்
இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி, ஸ்ரீமன் ஆகியோர் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளனர்.
Vijay Sethupathy அப்போது தான் ஸ்ரீமனுக்கு முத்தம் கொடுத்துள்ளார். பதிலுக்கு ஸ்ரீமனும் விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. விஜய்யைத் தொடர்ந்து ஸ்ரீமனுக்கும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார் என்று கூறி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.