Home சினிமா கோலிவுட் குடும்பத்தோடு பாருங்க தல அஜித்தின் அண்ணன் தம்பி பாசத்த: சன் டிவியில் வீரம்!

குடும்பத்தோடு பாருங்க தல அஜித்தின் அண்ணன் தம்பி பாசத்த: சன் டிவியில் வீரம்!

430
0
Veeram On Sun TV

Veeram On Sun TV; சன் டிவியில் தல அஜித்தின் வீரம்: டுவிட்டரில் டிரெண்டிங்! அஜித், தமன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான வீரம் படம் சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அஜித் நடிப்பில் வந்த வீரம் Veeram On Sun TV படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் வந்த முதல் படம் வீரம். அண்ணன் தம்பிகளோடு ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி வீரம் படம் உருவாக்கப்பட்டது.

வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இசை, தேவி ஸ்ரீ பிரசாத். விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் வீரம் படத்தை தயாரித்திருந்தது.

இந்தப் படத்தில் அஜித், சாதியைப் பற்றி வசனம் பேசியிருப்பார். ஆம்,

நீ தேவன் – னு நினச்சா தேவன்

நாடான் – னு நினச்சா நாடான்

வன்னியன் – னு நினச்சா வன்னியன்

கவுண்டன் – னு நினச்சா கவுண்டன்

அய்யர் – னு நினச்சா அய்யர்

நீ எந்த சாதினு நினைக்கிறியோ நான் அந்த சாதி டா…

ரத்தத்தில் சாதி பாக்காத

மொத்தத்தில் நான் உழைக்கிற சாதிடா…

இப்படியெல்லாம் வசனம் பேசி தனது ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.

Ajith Veeram Movie

வீரம் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு தெலுங்கில் கட்டமராயுடு என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த வீரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

சிவா – அஜித் கூட்டணிக்கு கிடைத்த முதல் பரிசு வீரம் படத்தின் வெற்றி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ஹிட் கொடுத்தன.

இந்த நிலையில், வீரம் படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், சன் தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கும். அப்போது கிடைக்காத வரவேற்பு இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதை முன்னிட்டு தாறுமாறாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

டுவிட்டரில் வீரம் படம் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் ரசிகர்கள் வீரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Sun TV Telecast Thala Ajith Veeram Movie Today at 6.30 pm

SOURCER SIVAKUMAR
Previous articleவிஷால் ஓடி ஒளியுற ஆள் இல்லை: தேடி உதவி செய்யுற ஆளு!
Next articleஇதோ வந்துருச்சு துப்பாக்கி 2 மோஷன் போஸ்டர்: வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here