Home சினிமா கோலிவுட் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்!

டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்!

304
0
Thalapathy Vijay Indian Television Actors

Thalapathy Vijay; டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்! தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகளில் மாஸ் ஹீரோக்களின் ஹிட் படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனங்கள் வீட்டிலேயே இருந்ததால், தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தினமும், மாஸ் நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில், இந்த லாக்டவுன் காலத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த இந்திய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் ராகவா லாரன்ஸ் 2ஆவது இடமும், 65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் ரஜினிகாந்த் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு போடப்பட்ட 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி!
Next articleஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த திருக்கோவில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here