Master Release In 5 Languages; அயலானுக்கு போட்டியாக வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர்! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படம் அயலான் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருந்த நிலையில் போட்டியாக விஜய்யின் மாஸ்டர் படமும் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய் நடித்த மாஸ்டர் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படம் தள்ளிப்போனாலும் நல்ல செய்தியோடு தான் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மாஸ்டர்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன், சாந்தணு, ஆண்ட்ரியா, நாசர், அர்ஜூன் தாஸ் என்று நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கல்வி முறையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல்.
கடந்த 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. அதோடு படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறைய படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 22 ஆம் வெளியாகும் என்றுகூறப்படுகிறது.
அன்று விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் டபுள் கொண்டாட்டம் தான்.
இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் மாஸ்டர் வெளியாகிறது.
மாஸ்டர் படக்குழுவினரின் மாஸ்டர் பிளான் இது என்றாலும், விஜய்யின் முதல் படம் தொடர்ந்து தமிழ், மலையாளாம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் என்ற முதல் தமிழ் படம் தான் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கு போட்டியாக விஜய்யின் மாஸ்டர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய், சிவகார்த்திகேயனுக்கு எல்லாம் போட்டியா? என்று கேட்டால் இல்லவே இல்லை. அப்புறம். இது தானாகவே அமைந்துவிட்டது.
ரஜினியைத் தொடர்ந்து விஜய்க்கு தான் பேன் இந்திய நடிகராக (Vijay Become Pan India Star) வரும் திறமை இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படம் பேன் இந்திய படமாக (Master is Pan India Movie) பார்க்கப்படுகிறது.
இதற்கான வேலைகளை படக்குழுவினர் மே 3 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.