Home சினிமா கோலிவுட் கொரோனாவை பரப்பியதாக கனிகா கபூர் மீது வழக்கு!

கொரோனாவை பரப்பியதாக கனிகா கபூர் மீது வழக்கு!

422
0
Singer Kanika Kapoor

Kanika Kapoor; கொரோனா அறிகுறி: அதையும் மீறி விருந்துக்கு சென்ற பாடகி கனிகா கபூர் மீது வழக்கு! கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பாடகி கனிகா கபூர் வெளியில் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று அலட்சியமாக இருந்ததாக கூறி பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்திரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவிட்19 (COVID 19) மனிதர்கள் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடுதல் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அடிக்கடி கைகளை கழுவுதலும் சானிடைசர்களை பயன்படுத்துவதும் அவசியம்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் பாடகி கனிகா கபூர் (Singer Kanika Kapoor). இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் தொற்று கிருமி என்பதால், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தனியறையில் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 11 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பி வந்த கனிகா கபூருக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவராக கருதப்பட்டார்.

ஆனால், கொரோனா அறிகுறிகள் தென்பட்ட போதும், பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், 3 விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஏற்கனவே அந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள் உள்பட பல விஜபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நரேந்திர மோடி

தற்போது கனிகா கபூர் விருந்து நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கனிகா கபூர் மீது ஐபிசி பிரிவு 269, 270, 188 ஆகிய பிரிவுகளில் நோயை பரப்புதல், மக்கள் ஊருக்கு ஊறுவிளைவித்தல், அரசு விதிகளை மீறி மக்களை தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleCorona Virus: கொரோனாவை விட கொடுமையானவன் மனிதன்!
Next articleமோடி வரை கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா குணமடைந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here