Home சினிமா கோலிவுட் Vaanam Kottatum – வானம் கொட்டட்டும்: பிப்ரவரி 7 முதல்

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும்: பிப்ரவரி 7 முதல்

465
0
vaanam kottatum வானம் கொட்டட்டும்

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும் தியேட்டரில் பிப்ரவரி 7-ம் தேதி முதல் காட்சிகளாக கொட்டத்தொடங்குகிறது!

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும்

மணிரத்னம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான “மெட்ராஸ் டாக்கீஸ்” தயாரித்துள்ள திரைப்படம் “வானம் கொட்டட்டும் “.

சரத்குமார், ராதிகா, விக்ரம்பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது இப்படம்.

மேலும், இப்படத்தின் மூலம் பிரபல பாடகர் “சித் ஶ்ரீராம்” இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். வெளிவந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

படத்தின் டீசரும் , ட்ரைலருமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான நல்ல  பிம்பத்தைதான் ஏற்படுத்தியுள்ளன.

கதை மணிரத்னம்

வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தின் கதை மணிரத்னம் அவர்களால் எழுதப்பட்டது.

ஆம்! அவர் எழுதிய கதையைத்தான் படமாக இயக்குகிறார் ‘தனா’. இவர் ஏற்கனவே படைவீரன் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாது, இவர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

சரத்குமார் – ராதிகா ரீல் அண்ட் ரியல்

நிஜவாழ்வில் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் சரத்குமார் மற்றும் ராதிகா இப்படத்திலும் கணவன் மனைவியாகவே நடிக்கின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு இருவரையும் ஒருசேர ஜோடியாக திரையில் காண்பதற்கும் அவர்களுக்கு இடையேயான உரையாடல்களைக் கேட்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விக்ரம் பிரபு – சாந்தனு காம்பினேசன்

விக்ரம்பிரபுவுக்கும் சாந்தனுவுக்கும் இது ஒரு நல்ல படமாக அமையுமா? என்ற கேள்வியும் உள்ளது.

எனெனில், கடந்த சில காலங்களாக பெரிதாக பெயர் சொல்லும்படியாக இவர்கள் நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இப்படம் அதை மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது பலரின் ஆசை.

ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தனது நடிப்பாலும்,தேர்ந்தெடுக்கும் படங்களாலும் ரசிகர்களை
கவர்ந்தபடியே இருக்கிறார். இப்படத்திலும் அவர் ரசிகர்களை கவர்ந்து செல்வாரா என்று பார்ப்போம்.

Vaanam Kottatum Sneak Peak

சமீபத்தில் வெளியான Vaanam Kottatum Sneak Peak வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படக்குழு வெளியிட்ட இக்காட்சிகளில் வரும் வசனங்களும் காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. அவ்வழகுக்கு பின்னனியில் பேரழுகு செய்கிறது இசை.

மணிரத்னம் இயக்காத படம்

ஏறத்தாழ பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மணிரத்னம் இயக்காத ஒரு படத்தை வெளியீடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வானம் கொட்டட்டும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. சினிமாக்களில் லாபத்தையும், ரசிகர்களிடமிருந்து பாராட்டையும் இத்திரைப்படம் கொட்டச்செய்கிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleஇன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020
Next articleதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here