Home சினிமா கோலிவுட் முழுசா நடிகர் சந்திரபாபுவாக மாறிய மாகாபா ஆனந்தை பாருங்க!

முழுசா நடிகர் சந்திரபாபுவாக மாறிய மாகாபா ஆனந்தை பாருங்க!

0
410
Ma Ka Pa Anand Latest Picture

Ma Ka Pa Anand; முழுசா நடிகர் சந்திரபாபுவாக மாறிய மாகாபா ஆனந்தை பாருங்க! விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் மாகாபா ஆனந்த் தாடி, மீசையை எடுத்து முழுசா நடிகர் சந்திரபாபு மாதிரி மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் Ma Ka Pa Anand புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் நடிகர் VJ Ma Ka Pa Anand மாகாபா ஆனந்த்.

ஆர்.ஜே.வாக தனது பணியை தொடங்கிய மாகாபா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வானராயன் வல்லவராயன் Vanavarayan Vallavarayan படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முறுக்கு, மாணிக், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறது. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

பிரபலமானவர்கள் இன்னும் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆம், தற்போது வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட வேலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகின்றனர்.

ஆம், வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது, உடற்பயிற்சி, யோகா, ஓவியம் வரைதல், தோட்டத்தை பராமரித்தல் என்று எப்போதுமே பிஸியாக இருக்கின்றனர்.

இதில், மாகாபா ஆனந்த் மட்டும் என்ன விதிவிலக்கா. இவரும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகிறார்.

ஆம், இதுவரை மீசை, தாடியுடன் வலம் வந்த மாகாபா ஆனந்த் தற்போது மீசை, தாடியை எடுத்து அந்த காலத்து நடிகர் சந்திரபாபுவாக மாறியுள்ளார்.

Ma Ka Pa Anand Latest Picture

ஒரு கட்டத்தில் பென்சிலால் மீசை வரைந்து அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் மாகாபா ஆனந்தை சந்திரபாபு Actor Chandrababu உடன் ஒப்பிட்டு வருகின்றனர். பார்ப்பதற்கு அப்படியே சந்திரபாபு மாதிரியே இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் சந்திரபாபு Actor Chandrababu கடந்த 1940 முதல் 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாகாபா ஆனந்தின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகவே வைரலாகி வருகிறது.

VJ Ma Ka Pa Anand Who is look like actor Chandrababu picture goes viral in social media

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here