Home சினிமா கோலிவுட் 5 Rs Doctor: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்!

5 Rs Doctor: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்!

460
0
Vijay 5 Rupees Doctor

Five Rupees Doctor Vijay: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்! கொரோனா வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், 5 ரூபா டாக்டர எங்கப்பா? என்று நடிகர் விஜய்யை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

மெர்சல் படத்தில் 5 ரூபாய்க்கு வைத்தியம் ( மருத்துவம் – Doctor) பார்த்த விஜய்யை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

உலகத்தையே ஆட்டி வைத்தது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கி, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 27 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருமே சமம் என்ற நோக்கில் உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர், களத்தில் இறங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ, டுவிட்டர் பதிவோ எதுவும் வெளியிடாத தளபதி விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Thalapathy Vijay 5 Rupees Doctor

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவரைப் போன்று பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடியும், ராம் சரண் ரூ.70 லட்சம், வருண் தவான் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர்.

மேலும், மகேஷ் பாபு ரூ.1 கோடி, கபில் சர்மா ரூ.50 லட்சம், அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி, பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ஆனால், இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தொழிலதிபர் டாடா குழுமத்தைச் சேர்ந்த ரத்தன் நவால் டாடா ரூ.500 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன், திரையரங்குகள் மூடல் மற்றும் சினிமா படப்பிடிப்பு ரத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு (FEFSI) உதவும் வகையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சிவகுமார் குடும்பத்தினர், விஜய் சேதுபதி, ஜெகன், ரோஷன், பார்த்திபன், மனோ பாலா, பிரகாஷ் ராஜ் ஹரிஷ் கல்யாண் என்று பலரும் உதவி செய்துள்ளனர்.

இவ்வளவு, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பெப்சி தொழிலாளர்களுக்கு 10 மூட்டை அரிசி வழங்கப்பட்டது.

ஆனால், விஜய், அஜித் போன்று மாஸ் நடிகர்கள் இதுவரை நிதியுதவி என்ற பெயரில் பெப்சி தொழிலாளர்களுக்கோ அல்லது பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதிக்கோ ஜல்லிக்காசு கூட கொடுக்கவில்லை.

அப்படியிருக்கும் போது படத்தில் மட்டும் 5 ரூபாய்க்கு இவர் மருத்துவர் பார்த்தார் என்று விமர்சனம் எழுகிறது.

ஆம், தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வரும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டுல 5 ரூவாய்க்கு மருத்துவம் பார்க்க சொன்ன நடிகர யாராவது பார்த்திங்களா? என்று விஜய்யை விமர்சித்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் இதுவரை கொரோனா வீடியோவோ அல்லது முதல்வர் மற்றும் பிரதமர் நிவாண நிதிக்கு நிதியுதவியோ அளிக்காததற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, மெர்சல் படத்தில் மத்திய அரசையும், சர்கார் படத்தில் மாநில அரசையும் விமர்சித்த காட்சிகளில் விஜய் நடித்து வசனம் பேசியிருப்பார். இதற்கு எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியது.

இது ஒரு புறம் இருக்க, கொரோனா வீடியோ வெளியிட்டால், அதனை மாநில அரசு தனது சுயநலத்திற்கு பயன்படுத்தி மக்களிடையே நல்ல பேர் பெற்றுக்கொள்ளும் என்பதால், அவர் விழிப்புணர்வு வீடியோ வெளியிடவில்லை.

இதே போன்று உதவி செய்வது என்றால், தனது ரசிகர்களுக்கு, மக்களுக்கு தானாகவே சென்று உதவி செய்யலாம்.

யாரது உதவியும் தேவையில்லை என்பதால், முதல்வர் மற்றும் பிரதமர் உதவியை விஜய் நாடவில்லை என்று கூறப்படுகிற்து.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தனது வீட்டில் வருமான வரி சோதனையை நடத்திய மாநில, மத்திய அரசுக்கு ஏன், நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

விஜய்யைப் பற்றி அவரது ரசிகர்களுக்கு தெரியும். உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்…இதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

SOURCER SIVAKUMAR
Previous articleLosliya video Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? – Fact Check
Next articleபின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here