தீனா என்ற படம் மூவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம். யுவன் சங்கர் ராஜா, முருகதாஸ், தல அஜித். Ajith – Mrugadoss – Yuvan Shankar Raja | Yuvan Special 1.
தீனா – Dheena
Yuvan Special 1. அரவிந்தன் படத்தில் அறிமுகமாகி இருந்த யுவன் தன்னை நிருபிக்கத்துடித்த நேரம் அது. முருகதாஸ் என்ற சாதனை இயக்குனரின் முதல் படம் தீனா.
தீனாவின் மூலம் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா மகன் யுவன் என்ற அடையாளம் நீங்கி யுவன் அப்பா இளையராஜா என சொல்லும் அளவிற்கு இசையில் கை தேர்ந்து விளங்கினார்.
வத்திகுச்சி பத்திக்காதுடா (vathikuchi pathikathuda)
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையிலே பட்டா இது அப்பப்பப்பா.. தல என்ற அடையாளம் உருவாகக்காரணம் யுவனின் இசையும் ஒன்று.
முருகதாஸ் என்ற இயக்குனர் முதல் படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார் என்றால் அதற்கு இவனின் இசை ஒரு முக்கிய காரணம்.
பெரிய ராஜாவிற்கு சளைத்தவன் இல்லை இந்த சின்ன ராஜா என்கிற அளவில் இருந்தது யுவனின் இசை. எஸ்.பி.பி. ஹைபிச் பாடல் யுவனை உலகறியச் செய்தது.
ஹைபிச் என்ன ராஜாவை விட இனிமையாய் மேலோடி கூட எனக்கு போடத்தெரியும் என யுவனின் பாக்காவான வாத்தியம் கொடுத்தது சொல்லாமல் தொட்டும் செல்லும் தென்றல்.
sollamal thottu sellum thenral சோகத்தையும் இனிமையை ரசிக்க வைத்தது. காதல் என்ற வார்த்தை தேகம் முழுவதும் பரவியது இந்த பாடலால்.
நீ இல்லை என்றால் (nee ilai endral) பாடல் இன்னொரு சிறப்பு. அஜித்திக்கு கேங்ஸ்டர் பிம்பம் ஏற்படக்காரணமே யுவனின் இந்த இசை தான்.
முருகதாஸ் அஜித் மட்டும் இவனால் பட்டை தீட்டப்படவில்லை இன்று முன்னணியில் வெற்றிநடை போடும் ஒரு நாயகன் உருவெடுக்க காரணமே யுவனின் இசை தான்…
படமே வெளிவரவில்லை என்றாலும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு இயக்குனர் உருவாகக் காரணமே இந்த யுவன் தான்.
அது யார்? யுவன் அப்படி என்ன அவர்கள் படங்களில் கலந்து உறவாடினார் என்பதை அவர்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போம்