Home நிகழ்வுகள் இந்தியா வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் ஆலோசனை

வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் ஆலோசனை

2243
0

வங்கிகள் இணைப்பு: பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைத்து நடவடிக்கை எடுக்க இன்று வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.

மார்ச் முதல் வாரம், மத்திய அரசு, 10 பொதுத்துறை வங்கிகளை 4 எனக் குறைப்பதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஏப்ரல் மாதம் வங்கிகள் இணைப்பு நடைபெற உள்ளது.

இந்த வங்கிகள் இணைப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா இந்த இரண்டு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைய உள்ளது.

சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைய உள்ளது.

இந்தியன் பேங்க், அலகாபாத் வங்கியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here