Home அரசியல் தில்லு இருந்தா வந்துபாரு; அன்புமணியை அதிரவைத்த உதயநிதி

தில்லு இருந்தா வந்துபாரு; அன்புமணியை அதிரவைத்த உதயநிதி

634
0
உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யத்தயார் என அன்புமணியின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

தேர்தல் நாள் நெருங்கிவிட்டது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விறுவிறு வேகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீண்ட நாட்களாக பிரதமர் நரேந்திர மோடியை ஒரே மேடையில் விவாதம் செய்ய அழைத்துகொண்டே உள்ளார்.

அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் மோடியை ஒரே மேடையில் விவாதம் செய்யத் தயாரா எனக் கேட்டுள்ளார்.

ஆனால் மோடி செவி கொடுப்பதாக இல்லை. அதேவளை எதிர்கட்சிகள் மீது பழிபோடுவதையும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் பாமக அன்புமணி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைத்தார். நீங்கள் அல்லது உங்கள் மகன் யாரேனும் ஒருவர் ஒரே மேடையில் என்னுடன் விவாதம் செய்யத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி நான் எப்போது வேண்டுமானாலும் மேடையில் விவாதம் செய்யத் தயார்.

சேலம் எட்டுவழிச்சாலையில் இருந்து விவாதத்தை துவங்க அன்புமணி தயாரா? எனக் கேள்வி சவாலை ஏற்று அதிரவைத்துள்ளார்.

இந்தப் பதிலை அன்புமணி சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார். தேவையில்லாமல் வாய்கொடுத்து மாடிக்கொண்டாரா? அல்லது தைரியமாக விவாதத்திற்கு தயார் எனக் கூறுவாரா எனப்பார்க்கலாம்.

Previous articleவெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா
Next articleதேர்தலுக்காக சிறுநீரகத்தை விற்கத் துணிந்த வேட்பாளர் சுகுர் அலி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here