Home நிகழ்வுகள் வெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித்...

வெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா

426
0

வெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா

ஐ‌பி‌எல் என்றாலே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று விளையாடிய லாசித் மலிங்கா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் மும்பை அணி சென்னையை எளிதாக வென்றது. போட்டி முடிந்த உடனே தனது சொந்த நாட்டில் நடக்கும் இன்டர்-புரோவிஸ்னல் ஒருநாள் தொடரில் காலே அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

உள்ளூர் ஒரு நாள் போட்டி தொடரில் அனைத்து இலங்கை வீரர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததால் பெரும்பான்மையான இலங்கை வீரர்கள் ஐ‌பி‌எல் தொடரில் பங்கேற்கவில்லை.

ஐ‌பி‌எல் தொடரில் விளையாடினாலும் கட்டாயம் ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியது. இதனால் முதல் 6 போட்டிகளில் மலிங்கா விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு போட்டிகளிலும் விளையாடலாம் என முடிவு செய்த மலிங்கா மும்பை சென்னை முடிந்த கையுடன் இலங்கை புறப்பட்டு அங்கு நடக்கும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அனுபவ வீரர் மலிங்கா ஐபிஎல் தொடரில் தான் விளையாடி வரும் அணியின் தேவையையும், தனது தாய் நாட்டின் தேவையையும் ஒரே சமயத்தில் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் வருங்கால தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

Previous articleவாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்
Next articleதில்லு இருந்தா வந்துபாரு; அன்புமணியை அதிரவைத்த உதயநிதி
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here