“ஜெய் பீம்” என்ற வார்த்தை உருவான வரலாறு. ஜெய் பீம் என்ற வார்த்தை உருவாகக் காரணம் “பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” மற்றும் “கோரேகாவ் போர்“.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
“பீம் ஜி” என்ற வார்த்தை பீம்ராவ் ராம்ஜி என்பதன் சுருக்கம். அம்பேத்கார் என்ற பெயர் அவருடைய ஆசிரியை மூலம் சூட்டப்பட்ட பெயர்.
அம்பாடவேகர் (Ambadawekar) என்ற பெயரை அம்பேத்கார் என மாற்றியவர் கிருஷ்ணாஜி கேஷவ் அம்பேத்கார் (Krishnaji Keshav Ambedkar) என்ற ஒரு பிராமண ஆசிரியர்.
அம்பாடவே (Ambadawe) என்ற கிராமத்தின் பெயரே முதலில் பீம்ராவ்விற்கு சூட்டப்பட்டது. பீம்ராவ் ராம்ஜி அம்பாடவேகர் என்பதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என தன்னுடைய குடும்பபெயரை பீம்ராவ்விற்கு ஆசிரியர் சூட்டினார்.
இறுதியாக அம்பேத்கார் என்ற அந்த ஆசிரியர் அன்பாக சூட்டிய பெயரே உலக அளவில் நிலைத்து நின்றுவிட்டது.
ஜெய் பீம் என்ற வார்த்தை உருவானது எப்படி?
இதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதற்கு முன் நடந்த வரலாற்று சம்பவங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். பீம் என்ற வார்த்தையுடன் ஜெய் என்ற வார்த்தை எப்போது இணைந்தது?
கோரேகாவ் போர் (Battle of Koregaon)
கோரேகாவ் போர் என்பது கோரேகான் பீமா என்ற இடத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும், பேஷ்வா (மராத்திய பேரரசு) இருவருக்கும் இடையில் நடந்த யுத்தம்.
மராத்திய பேஷ்வா சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் பாஜிராவ். அவருக்கு பின் அரியணை ஏறியவர் இரண்டாம் பாஜிராவ். இவர்கள் பிராமண இனத்தை சேர்ந்த மன்னர்கள்.
இவர் தலைமையில் 1881-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இருபத்து எட்டாயிரம் படை வீரர்களுடன் ஆங்கிலேயர் வசம் இருந்த புனே நகரை தாக்க ஆயத்தமாயினர்.
அந்த நாட்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தீண்டாமை மேற்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில்லை மிதித்தால் தீட்டு, காலடி தடத்தை மிதித்தால் தீட்டு எனக் கூறப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்கள் பிராமணர் வசிக்கும் தெருப்பகுதிக்கு வந்தால் கழுத்தில் சிறிய மண்குடத்தை கட்டிக்கொண்டு வருவார்கள். அதில்தான் அவர்கள் எச்சில் துப்பவேண்டும்.
அவர்கள் காலடி தடம் அழிய வேண்டும் என்பதற்காக பனை ஓலையை பின்னால் கட்டித் தொங்கவிட்டு வருவார்கள். அவர்கள் நடக்க நடக்க காலடி தடத்தை பனை ஓலை அழித்து விடும்.
இதுபோன்ற காரணங்கள் ஆங்கிலேய படைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிக அளவில் இணைந்தனர். மெஹர் (Mehar) இனத்தைச் சேர்ந்த மக்கள் அதில் அதிகம் இருந்தனர்.
பேஷ்வா படைகள் புனேவை தக்க செல்லுபோது, புனேவில் படையை வலுப்படுத்த கோரேகாவில் இருந்து 800 பேர் கொண்ட படை வருவதை அறிந்து அவர்களைத் தாக்க 2000 பேஷ்வா வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
2000 வீரர்களுடன் 800 வீரர்களை கொண்ட ஆங்கிலேய படை சுமார் 12 மணி நேரம் சண்டையிட்டது. இதில் 22 மெஹர் இனத்தைச் சேர்ந்த வீரர்கள் பலியாகினர்.
இந்த போரில் தோல்வியடைந்த இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார்.
இதனால், மஹார் இனத்தவரை பேஷ்வாக்கள் ‘துரோகிகள்’ என்று சொல்ல, ஆங்கிலேயர்களோ, மஹார்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக யுத்தம் நடந்த இடத்தில், நினைவுத் தூண் எழுப்பினார்கள்.
இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக ஆங்கிலேயர்கள் பீமா நதிக்கரையில் நினைவுத்தூணை நிறுவி அதில் இறந்தவர்கள் பெயரைப் பொறித்தனர்.
ஜெய் பீம் அம்பேத்கார்
இந்த வரலாறு அதன்பிறகு பெரிய அளவில் பேசப்படவில்லை. அம்பேத்கார் இதை மீண்டும் உலகிற்கு அறிமுகம் செய்தார்.
‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது.
1927-ல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை!
ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு ஆண்ட வம்சம் இருக்கும்போது நம் இனத்தில் இல்லையா? என அம்பேத்கார் மனதில் எழுந்த கேள்விக்கு கிடைத்த விடை தான் “ஜெய் பீம்”.
மஹாராஷ்டிரா என்ற தேசத்தின் சொந்தக்காரர்களே இந்த மெஹர் இன மக்கள் தான் என ஆண்டு தோறும் அங்கு ஜனவரி 1-ம் தேதி விழா எடுத்து கொண்டாட்டங்கள் நடைபெற அம்பேத்கார் காரணமாக அமைந்தார்.
அவருடைய பெயருக்கும், அந்த பீம் நதிக்கரைக்கும் இயற்கையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டது. அம்பேத்கார் அங்கே செல்லும்போது எழுந்த கோஷம் தான் “ஜெய் பீம்“.
பாபாசாகேப் – நானாசாகேப்
ஆங்கிலேயரிடம் பென்ஷன் வாங்கிய இரண்டாம் பாஜிராவ்விற்கு குழந்தை இல்லை. இதனால் 1827-ஆம் ஆண்டில் நானா கோவிந்த் தோந்து பந்த் என்ற குழந்தையை தத்தெடுத்து நானாசாகேப் எனப் பெயர் சூட்டினார்.
நானா என்றால் தந்தை. சாகேப் என்றால் ஐயா (sir) என்று பொருள். நானாசாகேப் தன் சிறு வயதில் ராணி இலட்சுமி பாய், தாந்தியா தோப், அஷி முல்லா கான் ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
முதலாவது விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857-ல் நடந்த இந்திய சிப்பாய் கலகம் போருக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவர்.
பாபாசாகேப் அம்பேத்கார் தந்தைக்கு மதிப்பு அளிக்கும்படி இந்த சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இந்திய சட்டத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு அம்பேத்காருக்கு உண்டு.
இவர் இல்லையேல் இன்னும் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இருந்து இருக்குமா? என ஒரு பெரிய கேள்விக்குறியே உண்டாகியிருக்கும்.
இந்து மதத்தை வெறுத்த இவர் எல்லா மதத்திலும் ஜாதி உள்ளது எனக் கூறி புத்த மதம் தழுவினார்.