புத்த பூர்ணிமா – Buddha Poornima: புத்த பூர்ணிமா என்றால் என்ன? புத்தர் வரலாறு. புத்த மதம் தோன்றிய வரலாறு. புத்தரின் நான்கு முக்கிய போதனைகள் என்ன?
உலகில் ஏற்படும் துன்பங்களை போக்க இறைவனின் அவதாரமாக எண்ணற்ற ஞானிகள் நமது பாரத தேசத்தில் பிறந்துள்ளனர்.
அவர்களில் துன்பதிற்கு காரணம் ஆசையே என்று போதித்து மக்களின் ஆசைகளை துறக்க சொல்லி நல்வழி படுத்திய மகான் “கௌதம புத்தர்” (Gautama Buddha).
அவரது ஜெயந்தி நாளே புத்த பூர்ணிமா என்று பௌத்த சமயத்தோரால் கொண்டாடப்படுகிறது.
புத்தர் வரலாறு
புத்தர் கி.மு 563 இல் லும்பினியின் (நேபாளம்) அரசர் சுத்தோதனருக்கு மே மாத முழுமதி நாளில் (வைசாகா) மகனாக பிறந்தார்.
புத்தரின் இயற்பெயர் சித்தார்தர். இவருக்கு பதினாறு வயதில் திருமணம் முடிந்து ராகுலா என்ற மகன் பிறந்தார்.
இல்லற வாழ்விலும், அரச வாழ்விலும் ஈடுபாடு இல்லாமல் 29 வயதில் வெளி உலகை காண கிளம்பினார். மக்கள் படும் துன்பங்களை, துயரங்களை கண்டு மிகவும் மனம் வருந்தினார்.
அதன்பின் காசிக்கு அருகே உள்ள கயாவில் போதி மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆறு ஆண்டுகள் தவம் செய்து ஞானம் பெற்றார்.
புத்த மதம் என்ற புதிய மதத்தை புத்தர் உருவாக்கி அதன் கொள்கைகளை உலகறியச் செய்தார். இன்றும் 350-550 பில்லியன் பௌத்தர்கள் உலகம் முழுதும் உள்ளனர் என கணக்கீடு உள்ளது.
புத்த பூர்ணிமா சிறப்புகள்
1. புத்தர் பிறந்த தினம்
2. புத்தர் ஞானம் பெற்ற தினம்
3. புத்தர் இறையான தினம்
புத்த பூர்ணிமாவின் மூன்று வகைகளும் சிறப்பு மிக்கதாகக் கூறப்படும்; மூன்றுமே மே மாதத்தில் வரும் பூர்ணை நாளில் நடந்ததாக வரலாறு உள்ளது. எனவே தான் புத்த பூர்ணிமா உலகம் முழுதும் பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இது ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீன, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இது மட்டுமன்றி உலகம் முழுதும் பௌத்தம் பரவி உள்ளது.
புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்:
- துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது பிறப்பு, நோய், முதுமை, இறப்பு, ஆசை, பசி, வெகுளி, பகை, மயக்கம் அனைத்தும் துன்பத்தை தருபவை.
- உலகில் மக்களின் துக்கத்திற்கு காரணம் ஆசை/பற்று ஆகும்.
- ஆசையை துறப்பது துன்பத்தை தடுக்கும்.
- நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நற்தியானம் இவை எட்டும் துக்கத்தை போக்கும் வழிமுறைகள் ஆகும்.
புத்த பூர்ணிமா விழா 2022 (Buddha Poornima 2022)
புத்தரை அறியாதவர்களும், பிடிக்காதவரும் எவரும் இல்லை என்றே கூறலாம். புத்தம் என்றாலே உயரிய ஞானம் பிறக்கும், மனத்தூய்மை அடையும், நல்வாழ்வு கிடைக்கும்.
புத்தரை இந்து மதத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதுகின்றனர். அவரை துதிக்க மறுப்பதில்லை.
புத்த மதத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பினும் கொள்கைகள் அனைத்தும் புத்தருடையதே ஆகும். அது வாழ்வை நெறிபடுத்தும் என்பது உண்மை.
இந்த ஆண்டு மே மாதம் 16-ஆம் நாள் பூர்ண முழுமதி நாளான இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
புத்தர் மதம் சாதி, சமயம் கடந்து அனைவராலும் துதிக்கப்படும். இந்த நாளில் அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரை நினைந்து தியானம் புரிந்து நற்பண்புகளை பின்பற்றி வாழ்வோம்.