Home Latest News Tamil கார்ல் மார்க்ஸ் வரலாறு – Karl Heinrich Marx History Tamil

கார்ல் மார்க்ஸ் வரலாறு – Karl Heinrich Marx History Tamil

1
939
கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் வரலாறு – Karl Heinrich Marx History Tamil. மார்க்சிசம் என்றால் என்ன? கார்ல் மார்க்ஸ் காதல், தோழன் ஏங்கல்ஸ் பற்றி தெரியுமா?

கார்ல் மார்க்ஸ் (Karl Heinrich Marx) ஒரு ஜெரமன் தத்துவவாதி, பொருளாதார நிபுணர், வரலாற்றாளர், சமூகவியலாளர், அரசியல் தத்துவவாதி, பத்திரிகையாளர் மற்றும் சோசலிச புரட்சியாளர் என்றெல்லாம் பலராலும் அறியப்படுகிறார்.

இவர் மே 5, 1818-ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள டிரையர் என்னும் இடத்தில் பிறந்தார். 1843-ஆம் ஆண்டு அவர் ஜென்னி வான் வெஸ்ட்பாலனை (Jenny Von Westphalen) திருமணம் செய்து கொண்டார்.

மார்க்சின் மிகவும் பிரபலமான தத்துவம், “வரலாற்று சடவாதம்” என்பதாகும். சடவாதம் என்பது வாழ்க்கையில் பணமும், பொருளுமே முதன்மையானது என்னும் வாதம் ஆகும்.

மதம், அறநெறி, சமூக கட்டமைப்புகள் மற்றும் பிற விஷயங்கள் எல்லாம் பொருளாதாரத்தில் வேரூன்றியுள்ளன என்று அவர் நம்பினார். அவருடைய பிற்பகுதியில் அவர் மதத்தை சகித்துக் கொண்டார்.

முதலாளித்துவம் பற்றி மார்க்சின் பார்வை

கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் ஒரு முற்போக்கான வரலாற்று நிலை என்று பார்த்தார். அது இறுதியில் உள் முரண்பாடுகளால் மந்த நிலையில் உள்ளதுடன், சோசலிசத்தை பின்தொடருவதாக எண்ணினார்.

முதலாளித்துவம் என்பது மக்களுக்கு இடையேயான “சமூக, பொருளாதார உறவு” என்று குறிப்பிடுகிறார். இது மூலதனத்தை வரையறுக்கிறது. இந்த அர்த்தத்தில் அவர்கள் மூலதனத்தை அகற்ற முயல்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

சோசலிசம் மற்றும் கம்யூனிசம்

சோசலிசம் என்பது ஒரு பொருளாதார தத்துவத்தின் மையத்தில் உள்ளதாகும். அதேநேரத்தில், கம்யூனிசம் என்பது பொருளாதாரம் மற்றும் அரசியல் தேவைகளுக்காக அரசாங்கத்தின் மத்திய உரிமையாளரின் முடிவுகளை உள்ளடக்கியதாகும். கம்யூனிஸ்ட் கட்சி எந்த மதத்தையும் நிராகரிக்கிறது.

மார்க்சிசம் என்றால் என்ன?

மார்க்சிசம் என்பது சமத்துவமின்மையின் அடிப்படையில் உள்ள பொருளாதார முறை எதிர்ப்பு, பெரும்பான்மை முறை மீதான விரோதப் போக்கு (ஊதியத் தொழிலாளர் முறை) மார்க்சிசம் எனப்படுகிறது.

மார்க்சிசம் நோக்கம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அமைத்துக் கொடுப்பதே ஆகும்.

மெய்யியல்

இயற்கை, சமுதாயம், சிந்தனை போன்றவற்றின் வளரச்சியை நோக்கிய அறிவியலே மெய்யியல் எனப்படுகிறது. இதனைச் சார்ந்த அறிவு, காரணம், மனம், மொழி போன்றவற்றின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றிய படிப்பு தத்துவவியல் எனப்படுகிறது.

புரட்சியாளர் மார்க்ஸ்

மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கருத்துக்களை மக்களிடம் விதைத்தவர். இவர் மெய்யியலாளர் மட்டுமின்றி அரசியல் வல்லுனர், ஆய்வாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் எனப் பலராலும் அறியப்பட்டாலும் புரட்சியாளராகவே மக்களிடம் பெரும்பாலும் அறியப்படுகிறார்.

ஏராளமான துறைகளில் இவர் வெளியிட்டுள்ள ஆய்வுகளும், கட்டுரைகளும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் நோக்கத்துடனேயே காணப்பட்டது.

பொதுவுடைமைக் கோட்பாடுகளை வகுத்தவர்களுள் முதன்மையானவராக மார்க்ஸ் அறியப்படுகிறார். இவருடன் இணைந்து பயணித்தவர் பிரெட்ரிக் ஏங்கல்சு (Friedrich Engels). இவர்கள் வர்க்க முரண்பாடுகளை எதிர்த்தனர்.

குழந்தை மார்க்ஸ்

மார்க்ஸ் பிரசியாவில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஹென்றிச் மார்க்ஸ் (Heinrich Marx). இவர் வசதியான வழக்கறிஞர்களுள் ஒருவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

இவரது இளம் வயது பற்றி தெளிவான தகவல் இல்லை என்றாலும் மார்க்சின் தந்தை ஒரு யூதராக அறியப்படுகிறார். ஆனால் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே கிறிஸ்தவராக மதம் மாறியதாகத் தெரிகிறது.

மார்க்ஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் கல்வி கற்றார். பின்னர் தனது 17-வது வயதில் பான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் கற்றுத் தேர்ந்தார். இறுதியாக எனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

பிரெட்ரிக் ஏங்கல்ஸ் சந்திப்பு

மார்க்ஸ் 1841-ல் பட்டம் பெற்ற பின்னர், சிலகாலம் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார். இவர் ரைனிஸ் சைத்துங் (Rheinische Zeitung) என்ற பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆனால் இவரின் பொதுவுடமைக் கருத்துக்களால் பணியை விடுத்து பாரிஸ் செல்லும் நிலை ஏற்பட்டது. இங்குதான் மார்க்ஸ் 1844-ல் பிரெடரிக் ஏங்கல்ஸை சந்தித்தார்.

இருவரின் பொதுவுடமை நோக்கம் நட்பாக மலரந்தது. இருவரின் உறவும் இறுதிவரை அமைந்தது.

கார்ல் மார்க்ஸ் காதல் – karl Heinrich Marx Fall n Love

கார்ல் மார்க்ஸ் காதல், 17-வது வயதில் லுத்விக் வான் வெஸ்ட்பாலனின் (Ludwig von Westphalen) மகளான ஜென்னி வான் வெஸ்ட்பாலனுடன் காதல் மலர்ந்தது.

அப்போது ஜென்னிக்கு வயது 21. குடும்ப பிரச்சனை காரணமாக தன் காதலை மறைத்து வைத்திருந்த மார்க்ஸ் ஜென்னியின் 29-வது வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏழு குழந்தைகள் என்றாலும் நான்கு குழந்தைகள் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர்.

மார்க்ஸின் முதல் நூல்

கார்ல் மார்க்ஸ் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். ஜார்ச் வில்லியம், பிரெடரிக் ஹெகல், ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ மற்றும் ஜான் ஜாக் ரூசோவின் கருத்துக்களால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

மார்க்ஸ் 1847-ல் தனது முதல் புத்தகத்தை “தத்துவத்தின் வறுமை” என்ற தலைப்பில் வெளியிட்டார். அடுத்த ஆண்டு பலராலும் அறியப்படும் “பொதுவுடைமை அறிக்கை” என்னும் புத்தகத்தை ஏங்கல்சுடன் சேர்ந்து வெளியிட்டார்.

இவர் பல புரட்சிகர இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் பல இடங்களில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் இலண்டன் சென்று இறுதிவரை வாழ்ந்தார்.

தோழன் ஏங்கல்ஸ்

மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் இலண்டனின் அரசியல் ஆராய்ச்சியிலும், பொதுவுடைமை பற்றிய நூல்களை எழுதுவதிலேயுமே கழித்தார்.

தனக்கு பத்திரிக்கைத் துறையில் கிடைத்த வருவாயையும் கூட மார்க்ஸ் தனது படைப்புகளுக்கே செலவளித்தார்.

1845-ல் பொதுவுடைமைக் கழகத்தை தொடங்கினார். அதில் உள்ள உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அவரகளுக்கு சிறிது பணத்தை கொடையாக வழங்கினார்.

இது அவரது பெற்றோரின் இறப்பிற்கு பின்னால் கிடைத்த பணம். பின்னர் நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ் மிகவும் வறுமைக்குள்ளானார்.

ஆடைகள் அனைத்தும் அடமானத்திற்கு சென்றன. மார்க்ஸின் மிக மோசமான சூழ்நிலை அது. மார்க்ஸ் வீட்டை விட்டுக்கூட வெளியே செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து வாழும் மோசமான பிரச்சனைகளுக்கு ஆளானார். வீட்டை விட்டும் மார்க்ஸ் விரட்டப்பட்டார்.

மாரக்சின் மோசமான சூழ்நிலையில் தனது மாத வருமானத்திலிருந்து சிறு தொகையை மார்க்சுக்கு வாழ்நாள் இறுதிவரை கொடுத்து உதவிய ஏங்கல்ஸ் சிறந்த தோழனாக இன்றுவரை அறியப்படுகிறார்.

லண்டன் பயணம்

மார்க்ஸ் நியூயார்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்குச் சிந்தனையுடைய பத்திரிக்கையில் ஐரோப்பிய அரசியல் நிருபர் ஆகப் பணியாற்றினார்.

அங்கு கட்டுரை எழுதுவதன் மூலம் அவருக்குச் சிறிதளவு பணம் கிடைத்தது. ஆனால் அவருடைய எல்லா கட்டுரைகளும் வெளியிடவில்லை.

சில கட்டுரைகளே வெளியிடப்பட்டன. மார்க்ஸ் மனைவி ஜென்னியின் பெற்றோர் இறப்பிற்குப் பின் அவர்களுக்கு மரபுரிமையாகப் கிடைக்கப்பெற்ற பணம் அவர்களை இலண்டனுக்கு குடிபெயர வைத்தது.

மூலதனம் நூல் (Capital)

ஐரோப்பாவில் நாட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு இங்கிலாந்து வரவேற்பு நகரமாகவே காணப்பட்டது.

பிருத்தானிய அருங்காட்சியகத்தில் மார்க்ஸ் ஒவ்வொரு நாளும் தனது நேரத்தை செலவிடத் தொடங்கினார். இங்குதான் மார்க்ஸின் “மூலதனம்” என்னும் நூல் தோன்றியது.

கார்ல் மார்க்ஸின் மிகச்சிறப்பு வாய்ந்த நூலாக இந்த நூல் காணப்படுகிறது. 1867-ல் வெளிவந்த முதல் பகுதியைத் தொடர்ந்து மார்க்ஸ் எழுதிய குறிப்புகளையும், பதிகளையும் ஏங்கல்ஸ் தொகுத்து இரண்டாம் பகுதியாக 1883-ல் வெளியிட்டார்.

மார்க்ஸின் சிந்தனைகள்

மார்க்ஸின் சிந்தனைகள் எல்லா காலகட்டத்திலும் உள்ள மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடியவையாக இருந்தது. அவருக்குப் பிடித்த சிந்தனைகள்:

* வரலாற்று தத்துவங்களும் அதன் ஆய்வும் – ஹெகல்
* செந்நெறி அரசியல் பொருளாதாரம் – ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்காடோ
* ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயன்ட் சிமோன், சார்லஸ் ப்யூரியர் போன்றோரின் சமூகவியல் சிந்தனைகள்.


* செருமானிய மெய்யியல் பொருளாதாரம் – லுத்விக் ஃபியூவெர்பக்
* தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு – பிரெடரிக் ஏங்கல்ஸ்

மார்க்ஸின் வரலாற்றைப் பற்றிய சிந்தனைகள் ஹேகலின் சிந்தனைகளை ஒத்திருந்தது. ஹேகல் அமெரிக்காவில் இருந்த அடிமை முறையை தீவிரமாக எதிர்த்தார்.

தத்துவவியல் கொள்கைகள்

மார்க்ஸின் தத்துவவியல் கொள்கையானது மனிதனின் இயற்கை இயல்புகளைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இயல்பு என்பதை “இயற்கையை மாற்றுவது” என அவர் குறிப்பிடுகிறார்.

இயற்கையை மாற்றுவதை “உழைப்பு” என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிந்தனையை “உழைக்கும் திறன்” என்றும் குறிப்பிடுகிறார்.

சிந்தனைகளின் முடிவு

தனது வாழ்நாள் முழுவதையும் சிந்திப்பதிலேயே கழித்த மார்க்ஸ் கடும் மார்புச்சளி நோயாளும், நுரையீரல் வீக்கத்தாலும் பாதிக்கப்பட்டார்.

1881 டிசம்பரில் அவரது மனைவி ஜென்னியின் இறப்பு அவரை படுக்கையில் தள்ளியது. 1883 மார்ச் 14-ஆம் தேதி இலண்டனில் மார்க்ஸ் காலமானார்.

ஏங்கல்ஸ் அவரது இறுதி சடங்கில் உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என தனது வார்த்தைகளால் துயருற்றார்.

மார்க்ஸின் படைப்புகள்

* ஹெகலின் தத்துவத்தைப் பற்றிய சரியான விமர்சனத்திற்குரிய அறிமுகம்
* தத்துவத்தின் வறுமை
* கேள்விகளுக்கான இலவச பரிமாற்றம்
* கம்யூனிஸ்ட் அறிக்கை
* மூலதனம்
* அரசியல் பொருளாதார ஆய்வின் அறிமுகம்

மார்க்ஸ் கல்லறையில் பொரிக்கப்பட்ட வரிகள்

“உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”

“தத்துவஞானிகள் உலகத்தை பல வழிகளில் புரிந்து கொள்கின்றனர் அவர்களின் நோக்கம் மாற்றம் மட்டுமே”.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here